Ajith : 'அஜித் வீட்டு காபி டம்ளரும்.. பின்னணியில் இருந்த உலக ரகசியமும்' கேட்டா ஆடிப்போயிடுவீங்க!
Ajith : வலது கை பழக்கம் இருப்பவர்கள் தான் அதிகம். இடது கை பழக்கம் குறைவான ஆட்களுக்கு தான் இருக்கும். நீங்க வெளி இடங்களில் கப் அண்டு சாஸர்ல ஜூஸ், டீ சாப்டா எல்லாரும் வலது கைல தா சாப்பிடுவாங்க அப்போ பெரும்பாலும் ஒரே இடத்தில் தான் எல்லாரோட வாயும் படும். அதுனால தா நான் இடது கைல சாப்பிடுறேன் என்றார்.
Ajith : 33 ஆண்டுகள் நடிகர் அஜித் குமாருடன் தொடர்ந்து பயணித்த மூத்த சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் மக்கள் தொடர்பாளர் V.K. சுந்தர் அவர்கள் அஜித்தின் தனிப்பட்ட வாழ்வில் உள்ள சீக்ரெட் குறித்த சுவாரஸ்யமான பல்வேறு விஷயங்களை தனது யூ டியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர் கூறியதாவது, அஜித் வாய்ப்பு தேடி அலைந்த கால கட்டத்தில் ரோட்டு கடையில் டீ குடிப்பார். ஒரு கட்டத்தில் சினிமாவில் ஜெயித்த அஜித் பாப்புலரான காலகட்டத்தில் அவர் ரோட்டு கடைகளுக்கு போக இயலாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டில் தான் காபி குடிப்பார். அவர் தன்னை பார்க்க வருபவர்களுடன் அமர்ந்து காபி குடிப்பார்..பெரும்பாலும் கப் அண்டு சாஸரில் தான் காபி வரும். ஒரு நாள் நான் கவனித்த போது அவர் இடது கையில் தான் காபி குடித்தார். இதை நான் கவனித்தேன். பின்னர் அடிக்கடி அவரை கவனித்த போது அவர் பெரும்பாலும் இடது கையில் தான் காபி குடித்தார். ஒரு நாள் நான் டவுட்டாகி அவரிடமே கேட்டேன். என்ன ஜி உங்களுக்கு வலது கை பழக்கம் இருக்கு. ஆனா காபி சாப்பிடுறப்ப மட்டும் நீங்க இடது கைல சாப்பிடுறீங்களேன்னு கேட்டேன். அவரு சொன்ன பதில் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.
ஆச்சரிய படுத்திய அஜித்...
உலகம் முழுவதும் கணக்கெடுத்து பார்த்தால் வலது கை பழக்கம் இருப்பவர்கள் தான் அதிகம் இருப்பாங்க. இடது கை பழக்கம் ரொம்ப குறைவான ஆட்களுக்கு தான் இருக்கும். நீங்க வெளி இடங்களில் கப் அண்டு சாஸர்ல ஜூஸ், டீ சாப்டா எல்லாரும் வலது கைல தா சாப்பிடுவாங்க அப்போ பெரும்பாலும் ஒரே இடத்தில் தான் எல்லாரோட வாயும் படும். அதுனால தா நான் இடது கைல சாப்பிடுறேன் என்றார்.
அதேபோல் அஜித் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ யாராவது அவரை பார்க்க வந்தால் அவரே போய் தண்ணி எடுத்துட்டு வந்து கொடுப்பார். அப்பறம் அவரே கெட்டில்ல காபி போட்டு கொடுப்பார். வீட்டிலுமே அஜித்தை யாராவது சந்திக்க சென்றால் அவர்களை வரவேற்ற பின்னர் அவரே போய்தான் காபி, ஜூஸ் எதுவாக இருந்தாலும் எடுத்துட்டு வருவார். வந்து அவரே தான் எல்லாருக்கும் கொடுப்பார். நாம் எழுந்தாலும் உட்காருங்கன்னு சொல்லிடுவார்.
இது பற்றி நான் கேட்ட போது. வந்துருக்கவங்க நம்ம கெஸ்ட். நம்மளே வந்து ஆத்மார்த்தமா அவங்கள ரிசீவ் பண்ணி அவங்களோட அன்பு செலுத்தினால் இது நெருக்கத்தை உண்டாக்கும். அது இன்னும் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மன நிறைவை தரும். அந்த சந்தோசத்திற்கு ஈடு இணையே கிடையாது என்றார்.
அஜித்திற்கு பிடித்த மட்டன் பிரியாணி
அதேபோல் அஜித்திற்கு பிடித்த உணவு மட்டன் பிரியாணி. ஆனால் ஒரு பொது இடத்தில் ஒன்றாக சேரும்போது எதிரில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கு சிக்கன் பிரியாணி பிடிக்கும் என்று சொன்னால் உடனே அவர் தனக்கு மட்டன் பிரியாணி பிடித்தால் கூட சிக்கன் பிரியாணி தான் ஆர்டர் பண்ணுவார். அந்த டைனிங்டேபிளில் தன் எதிரில் இருக்கும் நண்பர்களுக்கு அல்லது விருந்தினர்களுக்கு என்ன விருப்பமோ அதற்காக நாம் நமது விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார் என அஜித் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்களை சுந்தர் பகிர்ந்துள்ளார்.
சினிமா குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைதிருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்