HBD YogiBabu: ஒன்லைன் பஞ்ச் பேசி வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர்..! தமிழ் சினிமாவின் காமெடி நாயகன் யோகி பாபு
ஒவ்வொரு காமெடியன்களுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி உண்டு. அந்த வகையில் யோகிபாபு காமெடிகளின் சிறப்பாக ஒன்லைன் பஞ்ச் பேசி வயிறு குலுங்க சிரிக்க வைப்பது தான். தமிழ் சினிமாவின் காமெடி நாயகன் ஆக வலம் வரும் யோகி பாபுவுக்கு இன்று பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எப்படி உருவெடுக்கிறார்களோ அதைப்போல் ட்ரெண்டுக்கு ஏற்ப புதிய காமெடி நடிகர்களும் மாறி ரசிகர்களை மகிழ்விப்பது தவறாமல் நிகழும் விஷயமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகனாக உள்ளார்.
பிளாக் அண்ட் ஓயிட் படங்களில் என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி தற்போது வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தங்களுக்கென தனித்த அடையாளத்தை கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். அந்த அடையாளத்தை தங்களது ட்ரேட்மார்க் ஆக்கி ரசிகர்களை சிரித்து மிகழ வைத்திருப்பார்கள்.
இதில் யோகி பாபுவின் காமெடி பாணியாக ஒன் லைனர் பஞ்ச் வசனகள், கவுண்டர்கள் இடம்பிடித்துள்ளது. யோகி பாபு காமெடிக்களில் பாடி ஷேமிங் விஷயங்கள் இடம்பிடித்திருந்தாலும் வலிந்து திணக்கப்படாமல் கதாபாத்திரத்தில் எதாரத்த தன்மையுடன் இருப்பது தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக அவரை மாஸ் காமெடியன் ஆக்கியுள்ளது.