தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: புதிய சீதாவாக நடிக்க போவது யார்?

Seetha Raman: புதிய சீதாவாக நடிக்க போவது யார்?

Aarthi V HT Tamil
Jun 16, 2023 12:59 PM IST

சீதா ராமன் தொடரில் புதிய சீதாவாக நடிக்க இருப்பது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் நடத்தி வருகிறார். நடிகை பிரியங்கா சமீபத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையாக முருகன் கோயிலில் இவர்களது திருமணம் நடைபெற்று இருக்கிறது.

ராகுல் வர்மா என்ற தொழில் அதிபரை மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் கரம் பிடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கணவர் மலேசியாவிலும், பிரியங்கா சென்னையிலும் சீரியலில் நடித்து வந்தார்.

பிரியங்கா நல்காரி தற்போது சீதா ராமன் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது. 

இந்நிலையில் புதிய சீதாவாக யார் நடிக்க இருக்கிறார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதன் படி, சீதாவாக, நடிகை ஸ்ரீநிதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இவர் செந்தூரப்பூ சீரியலில் கதாநாயகியாக நடித்தவர். சீதா கதாபாத்திரம் ஸ்ரீநிதிக்கு எந்த அளவிற்கு பொருத்தமானதாக இருக்கும் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்