தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Captain Vijayakanth: எப்படி வந்தது இந்த 'கேப்டன்' விஜயகாந்த் பட்டம்?

RIP Captain Vijayakanth: எப்படி வந்தது இந்த 'கேப்டன்' விஜயகாந்த் பட்டம்?

Karthikeyan S HT Tamil
Dec 28, 2023 12:20 PM IST

RIP Captain: விஜயகாந்தின் 100-வது படம், வெள்ளி விழா சாதனை கண்ட திரைப்படம் என்ற பல பெருமைகளை பெற்றிருந்தது கேப்டன் பிரபாகரன்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் 80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் கடுமையான டஃப் கொடுத்து தனக்கென தனி ரூட்டை அமைத்தவர் விஜயகாந்த்.

1991-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார். பெரிய நடிகர்கள் அனைவருக்கும் 100வது படம் சறுக்கியபோது, விஜயகாந்தின் 100வது படம் 'கேப்டன் பிரபாகரன்' பெரும் ஹிட்டடித்தது. வனத்துறை அதிகாரியாக விஜயகாந்த் நடித்து அசத்தியிருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

இந்தப் படத்துக்காக விஜயகாந்த் சமரசம் இல்லாத உழைப்பைக் கொடுத்திருப்பார். ஹீரோவுக்கான ஓப்பனிங் சாங் இல்லாத வித்தியாசமான விஜயகாந்த் சினிமா. அதேநேரம், சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பக்கா ஆக்‌ஷன் சினிமா கலந்திருக்கும். கேப்டன் பிரபாகரனில் தான் மன்சூர் அலிகான் முதன் முதலாக அறிமுகமானார். படம் ஆரம்பிச்சு அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் விஜயகாந்தோட என்ட்ரி சீன் இருக்கும். அதுவரைக்கும் சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைச்சு அசுரத்தனமான வில்லனாக மன்சூர் அலிகானை அறிமுகப்படுத்தியிருப்பார் செல்வமணி.

படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவரை 'கேப்டன்' என்றே அழைக்க ஆரம்பித்தனர். அவரும் அதை ரொம்ப விரும்பினார். ஆரம்பத்தில் விஜயகாந்துக்குப் பட்டம் 'புரட்சிக் கலைஞர்' என்பதுதான். ஆனால், அதைவிட இந்த கேப்டன் நன்றாக இருப்பதாக எல்லோரும் சொல்ல, விஜயகாந்தும் அப்படியே அழைக்கச் சொல்லிவிட்டார். 

தேமுதிகவின் போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களில் கூட கேப்டன்தான் இடம்பெற்றிருந்தன. தேமுதிகவின் இணையதளம், விஜயகாந்தின் பேஸ்புக் போன்றவற்றிற்கும் கேப்டன் என்ற அடைமொழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் கூடுதல் சிறப்பாக அவர் தொடங்கிய தொலைக்காட்சியும் கேப்டன் டிவி என்றே அழைக்கப்படுகிறது. 1991-ல் தொடங்கிய கேப்டன் என்ற அடைமொழி விஜயகாந்தின் பெயருக்கு முன்பாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்