தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Animal Ranbir : ‘அர்ஜூன் ரெட்டி’ இயக்குநரின் அடுத்த படைப்பு ஆக்சன் அவதாரத்தில் ரன்பீர்; மிரட்டும் ‘அனிமல்’ டீசர்!

Animal Ranbir : ‘அர்ஜூன் ரெட்டி’ இயக்குநரின் அடுத்த படைப்பு ஆக்சன் அவதாரத்தில் ரன்பீர்; மிரட்டும் ‘அனிமல்’ டீசர்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 11, 2023 12:27 PM IST

ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் ப்ரீ டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது

Ranbir Kapoor Animal movie pre-teaser is here Kabir Singh director Sandeep Reddy Vanga presents action drama
Ranbir Kapoor Animal movie pre-teaser is here Kabir Singh director Sandeep Reddy Vanga presents action drama

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தை இயக்கியதின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் இந்தப்படத்தின் கதாநாயகானாக விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடித்தார். சந்தீப் ரெட்டி வங்காவின் உதவி இயக்குநர் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஹிந்தியில் இந்த திரைப்படம்  ‘கபீர் சிங்’ என்ற பெயரில் வெளியானது. ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்த இந்தத்திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்காவே இயக்கினார். கியாரா அத்வானி இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

இந்த நிலையில் இந்தப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தை சந்தீப் இயக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.  ‘அனிமல்’ என பெயர் வைக்கப்பட்ட இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரத்தம் வடிய கோடாளியுடன் ரன்பீர் தோன்றி இருந்தார். இந்தப்போஸ்டர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை எழுதி இயக்குவதோடு மட்டுமில்லாமல் இந்தப்படத்தின் எடிட்டராகவும் சந்தீப் பணியாற்றி இருக்கிறார். 

இந்தப்படத்தில் நடிகர் பாபி தியோல் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இந்தத்திரைப்படமானது வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அன்றைய தினம் பாலிவுட் பிரபல நடிகர் அக்சய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓ மை காட் 2’ திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்