தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vikram Injured: அச்சச்சோ.. என்ன ஆச்சு விக்ரமுக்கு.. ஒரு மாதம் ஓய்வு எடுக்கணுமா?

Vikram Injured: அச்சச்சோ.. என்ன ஆச்சு விக்ரமுக்கு.. ஒரு மாதம் ஓய்வு எடுக்கணுமா?

Aarthi V HT Tamil
May 03, 2023 12:19 PM IST

நடிகர் விக்ரமுக்கு தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது.

விக்ரம்
விக்ரம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று ( மே 2) தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருத்துவர்கள் அவரை ஒரு மாதம் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தொடர்ந்து நடைபெறும் தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளபோவது இல்லையாம்.

இது குறித்து விக்ரம் அலுவலகத்தில் இருந்து வந்த அறிவிப்பில், “ஆதித்த கரிகாலன் பாத்திரத்திற்கு கொடுத்த அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி.

விக்ரம் தங்கலான் படத்தின் ஒத்திகையின் போது காயம் அடைந்தார். இதன் விளைவாக விலா எலும்பு உடைந்தது. இதனால் அவர் தனது தங்கலன் பிரிவில் சிறிது காலத்திற்கு சேர முடியாது. உங்கள் அன்பிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு விரைவில் நலம் பெற்று வருவார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்