தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Captain Vijayakanth: சிவாஜி இறப்பில் திரண்ட கூட்டம்.. தனி நபராக விஜயகாந்த் செய்த செயல்

RIP Captain Vijayakanth: சிவாஜி இறப்பில் திரண்ட கூட்டம்.. தனி நபராக விஜயகாந்த் செய்த செயல்

Aarthi V HT Tamil
Dec 29, 2023 11:34 AM IST

விஜயகாந்த் மறைந்த நிலையில் அவர் தொடர்பான பழைய வீடியோக்கள் வைரலாகிறது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. சிவாஜியின் மரணத்தின் போது கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்தது. யாராலும் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த யடியவில்லை.

அப்போது விஜயகாந்த் வேஷ்டி, சட்டையில் தனி நபராக விரட்டி மாஸ் காட்டி இருக்கிறார். இறுதி ஊர்வலம் வரை கூடவே இருந்து விஜயகாந்த் செய்த உதவிகளை பார்த்து கேப்டனின் வீடியோ வைரலாகி வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

அவரது உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அன்று உடல் நிலை குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் நேற்று காலை 6.10 மணிக்கு பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4.45 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேடு நோக்கி வரும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்