தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bharath Jayanth: எனக்கு சப்போர்ட் பண்ண ஆள் இல்ல’; ஐஸ் விற்கும் விஜய் பட நடிகர்!

Bharath Jayanth: எனக்கு சப்போர்ட் பண்ண ஆள் இல்ல’; ஐஸ் விற்கும் விஜய் பட நடிகர்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 07, 2023 11:51 AM IST

ஃப்ரண்ட்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகர் பரத் ஜெயந்த் தற்போது குட்டியானையில் ஐஸ் விற்று வருகிறார்

பரத் ஜெயந்த்
பரத் ஜெயந்த் (india glitz)

ட்ரெண்டிங் செய்திகள்

லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த பரத் ஜெயந்த், சிறிது காலம் மாடலாகவும் வலம் வந்தார். பின்னர், இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் ‘இளமை நாட்கள்’என்ற படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து அதர்வா-நயன்தாரா வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை செய்தார். அதனை தொடர்ந்து படங்களுக்கு முயற்சி செய்யாமல் தற்போது குட்டியானையில் ஐஸ் விற்று வருகிறார்.

இது குறித்து india glitz சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்  , “ சிறுவயதில் இருந்து நிறைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்; கல்லூரி வந்த பின்னர் எனக்கும் திரைத்துறைக்கும் ஒரு சின்ன கேப் விழுந்து விட்டது; அதன் பின்னர் சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை செய்தேன்; சினிமாத்துறை ஒரு பக்கம் இருந்தாலும், நமது வாழ்கையை பாதுகாத்துக் கொள்ள இன்னொரு துறையிலும் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நான் முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது; காரணம் இமைக்கா நொடி படத்தின் இயக்குனர் எனது நண்பர்; அங்கு மிகவும் குறுகிய காலம்தான் வேலை பார்த்தேன்; அதன் பின்னர் இந்த பிசினஸில் நான் ஈடுபட முழுமூச்சாக முயற்சி செய்தேன்; ஒரு கட்டத்தில் அதற்கான வாய்ப்பும் எனக்கு வந்தது;

இந்த ஐடியா சிறு வயது முதலே இருக்கிறது; ஏனென்றால் இதுபோன்று ட்ரக்குகளை நாம் கார்ட்டூனில் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம்; அப்போதுதான் ஏன் நம்மூரில் இது இல்லை என்ற எண்ணம் எனக்கு வந்தது; உடனே இது பற்றி என்னுடைய நண்பர்களுடன் விவாதித்தேன்; அவர்கள் உதவியுடன் இந்த தொழிலில் இறங்கி இருக்கிறேன்; இதில் எனக்கு மூன்று பார்ட்னர்கள் இருக்கிறார்கள்; சென்னையில் ஐஸ்கிரீம் ஷாப்கள் நிறைய இருக்கின்றன; ஆனால் இதுபோன்று ட்ரக்குகளில் ஐஸ்கிரீம் விற்கும் நடைமுறை பெரிதாக இல்லை.

நான்கு வருடங்களாக இதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் இதை விரிவுபடுத்தும் எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது.

எனக்கு சினிமாவில் கொஞ்சம் ஆர்வம் குறைந்து விட்டது; ஒரு வேளை நான் முயற்சி செய்திருந்தால் கிடைத்திருக்குமோ என்னவோ.. குழந்தை நட்சத்திரமாக கிடைத்த பிரபலத்தை வைத்து நான் நிச்சயமாக முயற்சி செய்திருக்கலாம்; என்னிடம் அதற்கான நபர்களும் இருக்கிறார்கள்; ஆனால் எனக்கு என்னமோ அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை நீங்கள் குழந்தை நட்சத்திரமாக இருக்கலாம் அல்லது வேறு யாராக கூட இருக்கலாம் ஆனால் உண்மையில் சினிமாவில் ஜெயிப்பதற்கு பின்னால் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் வழியாக நாம் வெளியே தெரிவோம்; அதன் மூலம் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அந்த மாதிரி சப்போர்ட் செய்ய எனக்கு ஆள் இல்லை; அதனால்தான் நான் இந்த பிசினஸை தொடங்கினேன்" என்று பேசினார்

IPL_Entry_Point

டாபிக்ஸ்