ஃபஹத் பாசில் ஆவேசம் மாதிரியான கதை..மிஸ்ஸான அஜித்..கைவிடப்பட்ட படம் - விக்னேஷ் சிவன் ஷேரிங்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஃபஹத் பாசில் ஆவேசம் மாதிரியான கதை..மிஸ்ஸான அஜித்..கைவிடப்பட்ட படம் - விக்னேஷ் சிவன் ஷேரிங்ஸ்

ஃபஹத் பாசில் ஆவேசம் மாதிரியான கதை..மிஸ்ஸான அஜித்..கைவிடப்பட்ட படம் - விக்னேஷ் சிவன் ஷேரிங்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 30, 2024 01:54 PM IST

ஃபஹத் பாசில் ஆவேசம் மாதிரியான கதை அஜித்துக்கு உருவாக்கி வைத்திருந்தேன், காமெடி படமாக இருப்பதாக தயாரிப்பாளர் கூறியதால் கைவிடப்பட்டது என அஜித் படம் மிஸ்ஸானது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.

ஃபஹத் பாசில் ஆவேசம் மாதிரியான கதை..மிஸ்ஸான அஜித்..கைவிடப்பட்ட படம் - விக்னேஷ் சிவன் ஷேரிங்ஸ்
ஃபஹத் பாசில் ஆவேசம் மாதிரியான கதை..மிஸ்ஸான அஜித்..கைவிடப்பட்ட படம் - விக்னேஷ் சிவன் ஷேரிங்ஸ்

கடந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் நடிப்பதற்கு கமிட்டாவதற்கு முன் அஜித்குமார் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. அப்போது, விக்னேஷ் சிவா திரைக்கதை உருவாக்குவதில் தாமதம் செய்தார், அவரது கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என பல்வேறு தகவல்கள் உலா வந்தன.

இதையடுத்து அஜித்தின் புதிய படமான விடாமுயற்சி டீஸர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததன் பின்னணி பற்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார்.

அஜித்துக்கு பிடித்த நானும் ரெளடிதான் கதை

கோலிவுட் சினிமாவின் பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் உடனான உரையாடலில் அஜித் படம் இயக்க கமிட்டானதும், பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது பற்றியும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது,

"அஜித் என்னிடம் பேசியபோது நான் அதிகமாக படங்கள் பார்ப்பதில்லை. நானும் ரெளடிதான் படம் பிடித்திருந்தது. குறிப்பாக பார்த்திபன் கதாபாத்திரம் அருமையாக இருந்தது. அது மாதிரியான கதையை உருவாக்குங்கள் என சொன்னார்.

ஆவேசம் ஸ்டைலில் கதை

உடனடியாக நான் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஆவேசம் படம் போல் கதையை உருவாக்கினேன். ஆனால் படத்தயாரிப்பாளர்கள் இதற்கு ஒத்து கொள்ளவில்லை. அவர்களுக்கென்று தனியே விதிகளை கொண்டிருந்தனர். பெரிய ஹீரோ படங்களுக்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.

எனது கதையிலும் பல மாஸ் தருணங்கள் இடம்பிடித்திருந்தாலும் காமெடி படம் போல் இருப்பதாக சொன்னார்கள். இந்த பிரச்னையால் அஜித் படம் கைநழுவி போனது" என்றார்.

அஜித்குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணி கைவிடப்பட்டது பற்றி பல்வேறு விதமான தகவல்கள் உலா வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தியுள்ளார்.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி

விக்னேஷ் சிவா படம் கைவிடப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தின் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிக் பாஸ் ஆரவ் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். மங்கத்தா படத்துக்கு பின்னர் அஜித், த்ரிஷா, அர்ஜுன் ஆகியோர் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

அஜித் தனது மனைவியுடன் அஜர்பைஜான் சுற்றுலா செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் மனைவியும் மிஸ் ஆகிறார். இதையடுத்து ஹீரோ காணாமல் தனது மனைவியை கண்டுபிடிப்பதும், தன்னை டார்கெட் செய்து பின்னப்படும் வலையிலிருந்து தப்பிப்பதும் தான் விடாமுயற்சி படத்தின் கதை என தகவல்கள் உலா வருகின்றன.

அத்துடன் 1997இல் வெளியான ஹாலிவுட் படமான பிரேக்டவுன் ரீமேக் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீஸரில், எந்த டயலாக்கும் இடம்பெறாமல் அஜித்தின் ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் காட்சிகளுடன், "எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு" என்ற எழுத்துகள் மட்டும் தோன்றும் விதமாக அமைந்துள்ளது.

விக்னேஷ் சிவன் படம்

விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் எல்ஐகே படத்தில் கோமாளி, லவ் டுடே பட இயக்குநர் பிரதீப் ரங்கதநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யோகி பாபு, கெளரி கிஷான், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள்.

லவ் இன்சூரன்ல் கம்பெனி என்பதன் சுருக்கமே படத்தின் டைட்டிலான எல்ஐகே, அஜித்தின் விடாமுயற்சி, விக்னேஷ் சிவனின் எல்ஐகே என இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி படம் 2025 பொங்கல் ரிலீசாக வெளியாக இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் படம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என தெரிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.