Trisha: ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை..உள்ளூர உடைந்திருக்கிறேன்! திருமண உறவில் உறுதித்தன்மை குறித்து த்ரிஷா-trisha shares about her opinion on marriage as she dont want to divorce due to uncertainty actress throwback interview - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha: ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை..உள்ளூர உடைந்திருக்கிறேன்! திருமண உறவில் உறுதித்தன்மை குறித்து த்ரிஷா

Trisha: ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை..உள்ளூர உடைந்திருக்கிறேன்! திருமண உறவில் உறுதித்தன்மை குறித்து த்ரிஷா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 19, 2024 01:55 PM IST

Trisha On Marriage: ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை கோபத்தை வரவழைக்கும். அதுபோன்ற சூழலில் உள்ளூர உடைந்திருக்கிறேன். திருமண உறவில் உறுதித்தன்மை மிகவும் முக்கியம். டைவர்ஸ் செய்ய விரும்பவில்லை என திருமணம் குறித்து த்ரிஷா பேசியுள்ளார்.

Trisha: ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை..உள்ளூர உடைந்திருக்கிறேன்! திருமண உறவில் உறுதித்தன்மை குறித்து த்ரிஷா
Trisha: ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை..உள்ளூர உடைந்திருக்கிறேன்! திருமண உறவில் உறுதித்தன்மை குறித்து த்ரிஷா

லேட்டஸ்டாக வெளியாக தி கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்த த்ரிஷா, ரசிகர்களை குஷிப்படுத்தினார். சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ்களிலும் தலைகாட்டி வருகிறார் த்ரிஷா.

வரிசை கட்டி வர இருக்கும் த்ரிஷாவின் படங்கள்

அஜித்துடன் விடாமுயற்சி, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா, மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் தக்லைஃப், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து ராம் என அடுத்தடுத்து த்ரிஷா நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள வரவுள்ளன.

ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகையாக இருந்து வரும் த்ரிஷா அவ்வப்போது சில பேட்டிகளில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் பழைய பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். தான் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்பது பற்றி த்ரிஷா எமோஷனலாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். 

திருமண உறவில் உறுதித்தன்மை முக்கியம்

அதில்," திருமணம் என்பது நேர்மையாக நீங்கள் உங்களது மீத வாழ்க்கையை ஒருவருடன் இணைந்து வாழ்வதாகும். திருமணம் இதைத்தான் பிரதிபலிக்கிறது. எனவே நீங்கள் தேர்வு செய்யும் நபர் சரியானவரா? இவர்தான் இனி நம் வாழ்க்கையில் இருக்க போகிறாரா என்கிற கேள்வி இருக்கும்.

அப்படி ஒரு உறுதிதன்மை இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அப்படி உணர்வை ஏற்படுத்தும் நபருக்காக காத்திருக்கலாம்.

மாறாக திருமணம் செய்து இருத்தரப்பினரும் காயமடைந்து, மிகழ்ச்சியை இழந்து கட்டாயமாக வாழ வேண்டிய நிலை வரும். தவறான ரிலேஷன்ஷிப் மூலம் டைவர்ஸ் செய்ய விரும்பவில்லை.

எனக்கு இன்னும் திருமண குறித்த திட்டம் எதுவும் இல்லை. எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று கூட தெரியாது. என் வாழ்நாள் முழுவதையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு மனிதனை நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

உள்ளூர உடைந்திருக்கிறேன்

ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை கோபத்தை வரவழைக்கும். எதுவாக இருந்தாலும் அமைதியாக வாழ்க்கை போகும் போக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தாயார் பல முறை கூறியிருக்கிறார். அதன் நான் பின்பற்றுகிறேன்.

நாம் மிகவும் நம்பிய நபர் நம்மை தரம் தாழ்த்தி நடத்துவதை சமாளிப்பது கடினமான விஷயம். அத்தகைய தருணம் உள்ளூர உடைந்திருக்கிறேன். இதுபோல் பல கடினமான நாள்கள், மாதங்களை கடந்து என்னை நானே உயர்த்திக்கொண்டுள்ளேன்" என்றார்.

நிச்சயதார்த்தத்துடன் நின்ற த்ரிஷா திருமணம்

கடந்த 2015இல் பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியன் - நடிகை த்ரிஷா ஆகியோருக்கு நிச்சயார்த்தம் நடைபெற்றது. இரு தரப்பினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகின.

திருமண தேதி முடிவாகாத நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதில்லை என தகவல்கள் வெளியாகின. வருண் மணியன் - த்ரிஷா ஆகியோருக்கு இடையே பிரேக்கப் ஏற்பட்டதால் திருமணம் நின்று போனது.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என த்ரிஷாவிடம், வருண் மணியன் கண்டிஷன் போட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே த்ரிஷா திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என கூறப்பட்டது.

அதேபோல் தென்னிந்தியாவில் மிக பெரிய தொழிலதிபாராக இருந்து வரும் வருண் மணியன் தந்தைக்கு தனது மகன் நடிகையை திருமணம் செய்ய விரும்புவது ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை எனவும், இதன் காரணமாகவும் திருமணம் தடைபட்டது எனவும் தகவல்கள் வெளியாகின.

எது எப்படியாக இருந்தாலும் பல சினிமா நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை த்ரிஷா வாழ்க்கையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து, திருமணத்துக்கு முன்னரே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்.

இதன் விளைவாகவே திருமண உறவில் உறுதித்தன்மை இருக்காது என கருதி தற்போது வரை திருமணத்தை தவிர்ப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.