பந்தயத்துக்கு நான் ரெடி..புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ்! F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கும் அஜித்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பந்தயத்துக்கு நான் ரெடி..புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ்! F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கும் அஜித்

பந்தயத்துக்கு நான் ரெடி..புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ்! F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கும் அஜித்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 27, 2024 09:00 PM IST

புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ் கொடுத்திருக்கும் அஜித்குமார், 2010 ரேஸுக்கு பின் 15 ஆண்டுகள் கழித்து F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கிறார்.

பந்தயத்துக்கு நான் ரெடி..புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ்! F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கும் அஜித்
பந்தயத்துக்கு நான் ரெடி..புதிய ரேஸ் காருடன் கூலாக போஸ்! F1 சர்குட்டில் கம்பேக் கொடுக்க இருக்கும் அஜித்

அவரை போல் அஜித்குமாரும் நடிப்புக்கு குட்பை சொல்லாவிட்டாலும் தனது பேஷனாக இருந்து வரும் ரேஸ் விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்.

நடிப்பு தவிர ரேசிங்கிலும் கவனம் செலுத்தி வந்த அஜித் சர்வேதசே அளவிலான பைக் மற்றும் கார் ரேஸ் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வரும் அஜித்குமார், மீண்டும் பந்தயப் பாதைக்கு வர இருக்கிறார். ஸ்பெயினில் உள்ள சர்க்யூட் டி பார்சிலோனா-கேடலுனியாவில் தனது அடுத்த சாகசத்தை அவர் தொடர இருக்கிறார்.

F1 சர்கியூட்டில் அஜித்

அஜித் பேன்ஸ் கிளிப் சார்பில் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் பதிவில், அஜித் தனது காருடன் F1 சர்க்யூட்டில் போஸ் கொடுக்கும் படங்கள் இடம்பிடித்துள்ளது. அந்த பதிவிவ், “ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா F1 சர்க்யூட்டில் இருந்து அஜித்தின் சமீபத்திய படங்கள். மேன் ஆன் ஏ மிஷன்! #அஜித்குமார் | #அஜித்குமார் ரேசிங்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

24H தொடரில் பங்கேற்க இருக்கும் அஜித்,ரேஸில் பங்கேற்கும் தனது காரின் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளார்.. அத்துடன் அவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோட்டார் பந்தயத்துக்குதயாராகி வருகிறார் நடிகர்.

அஜித்குமார் தற்போது சொந்தமாக ரேஸ் பந்தய அணியை வைத்திருக்கும் நிலையில், 24H துபாய் 2025 மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் அவரது அணி பங்கேற்கிறது. இந்த ரேஸ்களில் அஜித்தும் பங்கேற்வுள்ளார்.

அஜித் பெயருடன் தமிழ்நாடு அரசு லோகோ

ரேஸ் கியர் அணிந்து ஸ்டைலாக தோன்றும் அஜித்தின் ரேஸ் கார் முன்பக்கத்தில் அவரது பெயர் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை லோகோவும் அந்த காரில் பதிக்கப்பட்டுள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட இந்த காருடன் போஸ் கொடுத்துள்ளார். இதன் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அஜித் 2010ஆம் ஆண்டு MRF ரேசிங் தொடரில் பங்கேற்ற ஸ்போர்ட்ஸ் கார் பந்தய வீரராக திகழும் அஜித்குமார், சென்னை, மும்பை மற்றும் டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு சுற்றுகளிலும், ஜெர்மனி மற்றும் மலேசியாவிலும் சர்வதேச அளவில் போட்டியிட்டுள்ளார். கூடுதலாக, அவர் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் அர்மான் இப்ராஹிம் மற்றும் பார்த்திவா சுரேஷ்வரனுடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்றிருக்கிறார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்' அணியை தொடங்கினார். துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

அஜித்குமார் படங்கள்

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக துணிவு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற மற்றொரு படத்திலும் நடிக்கிறார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கின்றன. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.