சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு செம நியூஸ்.. காத்திருந்தது போதும்.. வேட்டையன் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
Vettaiyan OTT Release : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேட்டையன் ஓடிடி ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த ஓடிடியில் படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு செம நியூஸ்.. காத்திருந்தது போதும்.. வேட்டையன் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையான் - தி ஹண்டர்' திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது அதே படம் ஓடிடி ரிலீஸாக உள்ளது. வேட்டையன் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் டோலிவுட் நடிகர் ராணா டகுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும், பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன், பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில், மஞ்சு வாரியர், ரோகினி, அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்
மல்டி ஸ்டாரர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே சற்று அதிகமாக இருந்தது. குறிப்பாக ரஜினி படம் என்று வரும்போது அந்த கிரேஸ் இருந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 10-ம் தேதி வெளியானது.