‘துப்பாக்கியை கைல வாங்கிட்டார்ல’ சிவகார்த்திகேயன் உடன்இணைவது எப்போது? - அமரன் மேடையில் லோகேஷ் கனகராஜ் பதில்!
சிவகார்த்திகேயன் உடன் எப்போது இணைவீர்கள் என்பதற்கு லோகேஷ் கனகராஜ் பதில் கொடுத்திருக்கிறார்.

அமரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், “ நிறைய டிஸ்யூ பேப்பர்லாம் வச்சுட்டுதான் கமல் சார் அமரன் படத்தை பார்த்தார் என்று கேள்விப்பட்டேன். இந்தப்படம் நம்மை பெருமை பட வைக்கும்.” என்றார். இதனையடுத்து தொகுப்பாளர் டான் சிவகார்த்திகேயனுடன் நீங்கள் எப்போது இணைவீர்கள் என்று கேட்டதற்கு, “ நீண்ட நாட்களாகவே அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. சீக்கிரமாவே நடக்கும். அதான் துப்பாக்கிய கைல வாங்கிட்டார்ல” (கோட் திரைப்படத்தில் தனது துப்பாக்கியை விஜய் சிவகார்த்திகேயனிடம் கொடுத்ததை குறிப்பிட்டு) என்று பேசினார்.
மேலும் அந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. அந்தப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தன. அப்போது சிவகார்த்திகேயன் அவ்வளவுதான்.. இனி காலி என்றெல்லாம் பேசினார்கள். அந்த சமயத்தில்தான் தீபாவளி கெட் டு கெதருக்காக என்னுடைய நண்பர் அழைத்தார் என்று நான் சென்று இருந்தேன்.