கீரித்தி சுரேஷ் பாடல்..வருண் தவானுடன் க்யூட் டான்ஸ் ஆடிய சமந்தா - வேற லெவல் கெமிஸ்ட்ரி
கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி தரிசனம் காட்டிய பாடலில் வருண் தவானுடன் க்யூட் டான்ஸ் ஆடியுள்ளார் சமந்தா. இருவருக்கும் இடையே வேற லெவல் கெமிஸ்ட்ரி இருப்பதாக ரசிகர்களை கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த மாத தொடக்கத்தில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த சிட்டாடல்: ஹனி பன்னி
வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. சமந்தாவின் கம்பேக்காக அமைந்த இந்த தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமந்தாவின் பாலிவுட் என்ட்ரியாக அமைந்த இந்த வெப்சீரிஸில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த சீரிஸில் பெண் குழந்தைக்கு தாயாக நடித்திருந்த சமந்தா ஆக்ஷன், ரெமான்ஸ் என நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தார்.
இதையடுத்து சிட்டாடல்: ஹனி பன்னி வெற்றி பெற்ற நிலையில் அதற்கான சக்சஸ் மீட் மும்பையில் நடைபெற்றது. இதில் அந்த சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே, நடிகை வாமிகா கப்பி, நடாஷா தலால், மிருணாள் தாக்கூர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
வருண் - சமந்தாவின் க்யூட் டான்ஸ்
கடந்த சில நாள்களுக்கு முன் வெளியான பேபி ஜான் படத்தின் சிங்கிள் டிராக் ஆக 'நைன் மடாக்கா' என்ற பாடல் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி நடனம் படு வைரலானது. இதில் வெள்ளை நிற ஷாட்ர் கட் கவுன் அணிந்து வருண் தவான் - கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடனமாடிய காட்சியை சிட்டாடல் சக்ஸ் மீட்டில் வைத்து வருண் தவான் - சமந்தா ஆகியோர் ரீ கிரியேட் செய்துள்ளனர். இதன் விடியோ வைராகி வருவதுடன், லைக்குகளையும் குவித்து வருகிறது.
"மிகவும் ரெமாண்டிக்காக இருக்கிறது", "மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்", "இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்கலாம், இவர்கள் இருவரும் ஆக்ஷனில் மிரட்டினார்கள்", "இந்த ஜோடியின் டான்ஸ் மட்டும் மிஸ் செய்தோம். தற்போது அதையும் பார்த்த திருப்தி கிடைத்துள்ளது" என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
நைன் மடாக்கா பாடல்
வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை வெளிக்கொண்டு வரும் வகையில் அதிரடி பெப்பி பாடலாக 'நைன் மடாக்கா' உள்ளது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலை இர்ஷாத் கமில் எழுதியிருக்கும் நிலையில், உலகப்புகழ் பெற்ற பாடகர்களான தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீக்ஷிதா வெங்கடேசன் என்கிற தீ ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த பாடலில் இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி தரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய் -சமந்தா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் பேபி ஜான் படம் கீர்த்தி சுரேஷின் பாலிவுட் என்ட்ரியாக அமைந்துள்ளது.
சிட்டாடல் கதை
ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கும் சிட்டாடல் ஒரிஜினல் பதிப்பில் பிரியங்கா சோப்ரா - ரிச்சர்டு மேடன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இதிலும் ஆக்ஷனுடன், கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்திருப்பார் பிரியங்கா சோப்ரா. நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் மேலாடையின்றி தோன்றியிருப்பார்.
அந்த அளவுக்கு சிட்டாடல் இந்திய பதிப்பில் போல்டான காட்சிகள் இடம்பெறவில்லை என்றாலும், இதுவரை கவர்ச்சியில் மட்டும் ரசிகர்களை மகிழ்வித்து வந்த சமந்தா தற்போது ஒரு படி மேலே சென்று நெருக்கமான போல்ட் காட்சியிலும் தோன்றி புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கும் சிட்டாடல் கதை 2030இல் நடப்பது போன் காட்டப்பட்டிருக்கும். இதைத்தொடர்ந்து இதன் இத்தாலிய பதிப்பாக சிட்டாடல்: டயானா கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்த தொடர் 2020 முதல் 2024 வரை காலகட்டத்திலும், சமந்தா நடித்திருக்கும் தொடர் சிட்டாடல் யுனிவர்ஸ் ப்ரீகுவலாக 1993 முதல் 2000 காலகட்டத்தில் நடக்கும் கதையாகவும் உள்ளது.
டாபிக்ஸ்