சிட்டாடல் வெப்சீரிஸ்..ஆக்ஷன் மட்டுமல்ல ரெமான்ஸும் கொஞ்சம் தூக்கல் தான்! வைரலாகும் சமந்தா லிப்லாக் விடியோ
Samantha Hot Kiss: பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிட்டாடல் வெப்சீரிஸ் வெளியான நிலையில், சமந்தா லிப்லாக் விடியோ வைரலாகியுள்ளது. சமந்தாவின் பாலிவுட் என்ட்ரியாக அமைந்திருக்கும் இந்த வெப்சீரிஸில் ஆக்ஷன் மட்டுமல்ல, ரெமான்ஸும் கொஞ்சம் தூக்கல் தான்.

சமந்தாவின் கம்பேக்காக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸ் அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் வெப் சீரிஸான சிட்டாடல் ஸ்பை யுனிவெர்ஸ் இந்திய பதிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இதில் சமந்தா - வருண் தவான் இடையிலான ஹாட் லிப் லாக் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரொமான்ஸில் கலக்கிய சமந்தா
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இதையடுத்து அவரது கம்பேக் ஆக தற்போது வெளியாகியிருக்கும் சிட்டாடல் வெப் சீரிஸ் அமைந்துள்ளது.
தனது படங்களில் அற்புதமான நடிப்பு, க்யூட் தோற்றத்தால் ரசிகர்களை கவரும் சமந்தா கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வந்துள்ளார். அந்த வகையில், சமந்தாவின் பாலிவுட் என்ட்ரியாக தற்போது வெளியாகியிருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸில் ஆக்ஷன் ராணியாக அவதாரம் எடுத்திருப்பதோடு, கவர்ச்சி மற்றும் நெருக்கமான காட்சிகளிலும் எந்த குறையும் இல்லாமல் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார்.
