"நான் என்ன 'செகண்ட் ஹேண்டா?' கிண்டலுக்கும் எல்லை உண்டு".. நெட்டிசன்களால் சூடான சமந்தா..
நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் பலரும் 'செகண்ட் ஹேண்ட்', 'யூஸ்டு' என்ற வார்த்தையை பயன்படுத்தி தன்னை கிண்டல் செய்ததாக சமந்தா வருத்தத்துடன் கூறியுள்ளார்.
நடிகை சமந்தா, வருண் தவானுடன் நடித்து வெளியான 'சிட்டாடல்: ஹனி பன்னி' வெப் சீரிஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சமந்தா இந்த வெப் சீரிஸ் குறித்தும் தனது சொந்த தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நிறைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், சமந்தா வருண் தவானுடன் நடத்திய உரையாடலில், விவாகரத்திற்குப் பின் சந்தித்த கேலிகளையும், கிண்டல்களையும் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
நாக சைதன்யாவுடன் எனக்கு மனம் ஒத்து விவாகரத்து நடந்தது. ஒரு திருமணம் முறிந்தால் என்ன? எப்போதும் பெண்களை மட்டும் ஏன் குறை கூறுகிறீர்கள்? எனக்கு எதிராக பல பொய்கள் பரப்பப்பட்டுள்ளன.
என்ன மாதிரியான சமூகம் இது?
சிலர் சோசியல் மீடியாவில் என்னை 'செகண்ட் ஹேண்ட்' மற்றும் 'யூஸ்டு' என்று குறிப்பிட்டு கிண்டல் செய்தனர். இப்படிப்பட்ட வார்த்தைகள் மனதைப் புண்படுத்தும் என்று அவர்கள் நினைக்கவில்லையா? நாம் என்ன செய்வது இப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த கடினமான நேரத்தில் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு ஆதரவாக நின்றனர் எனக் கூறினார்.
சமந்தா காதல் டூ விவாகரத்து
நாக சைதன்யாவும், சமந்தாவும் சில ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களின் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு சிங்கிளாக இருக்கும் சமந்தா, பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். மறுபுறம், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.
திருமண உடையை மாற்றி அமைத்த சமந்தா
நாக சைதன்யாவின் திருமணம் குறித்த செய்தி வெளிச்சத்திற்கு வந்தவுடன், சமந்தா தனது திருமண கவுனை கோவத்தில் மறுவடிவமைத்ததாக செய்திகள் வந்தன. அவை உண்மையா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிதத் சமந்தா, "நான் திருமண கவுனை கோபத்திற்காகவோ அல்லது பழிவாங்குவதற்காகவோ மறுவடிவமைக்கவில்லை.
உண்மையில், நான் அதைச் செய்ய மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால், சில விஷயங்களில் வாழ்க்கை எங்கே முடிகிறதோ அங்கேயே நாமும் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் அது நம்முள் வேறு மாதிரியான புது ஆரம்பத்தை ஏற்படுத்திவிடும் என்றார்.
சிட்டாடல் ஹனி பன்னியில் இருந்து விலக நினைத்த சமந்தா
முன்னதாக, சமந்தா மயோசிடிஸ் நோயாலா பாதிக்கப்பட்ட சமயத்தில், சிட்டாடல் ஹனி பன்னி தொடரில் நடிக்க மறுத்தார். மேலும், தனக்கு பதிலாக வேறு 2 நடிகைகளில் யாரையாவது ஒருவரை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியிருந்தார் என்ற தகவல் வெகுநாட்களாக பரவி வருகிறது. இது உண்மையா என அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சமந்தா, அதை ஒப்புக் கொண்டார். மயோசிடிஸ் காரணமாக 2022 ஆம் ஆண்டில் அவர் சினிமாவிலிருந்து விலகி இருந்ததாக கூறினார். மேலும், உடல்நிலை சரியில்லாததால் இந்த வெப் சீரிஸில் நடிக்க முடியவில்லை. தனக்கு பதிலாக கியாரா அத்வானி அல்லது கிருதி சனோன் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார்.
முத்திரை பதித்த சமந்தா
ஆனால். சிட்டாடல் ஹனி பன்னி இயக்குநர் ராஜ், டிகே அதற்கு சம்மதிக்கவில்லை. சமந்தா குணமடையும் வரை காத்திருந்து படப்பிடிப்பை தொடங்கினார். இதனால் சிட்டாடல்: ஹனி பன்னி வெப் சீரிஸில் ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இல்லாமல், சமந்தா எமோஷனல் காட்சிகளிலும் நடித்து முத்திரை பதித்துள்ளார்.
டாபிக்ஸ்