Varalakshmi Sarathkumar: ‘ அவ்வளவா பொருத்தம் இல்லையா..?; நீயா வாழப்போற.. பிடிக்கலன்னா போடா’ - வெளுத்த வரலட்சுமி!
எங்கள் உறவு குறித்து நெகட்டிவாக கமெண்ட் செய்பவர்களை நான் கண்டு கொள்வதே இல்லை. ஆரம்பத்தில் இருந்தே இது போன்ற நெகட்டிவான விஷயங்களை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

வரலட்சுமி!
பிரபல நடிகையான வரலட்சுமி தன்னுடைய வருங்கால கணவர் நிகோலய் சச்தேவ் குறித்து, கலாட்டா சேனலுக்கு அண்மையில் பேசி இருந்தார்.
இது அவர் பேசும் போது, “நிக்கியை பொருத்தவரை, அவருடைய தந்தை ஆர்ட் கேலரி சம்பந்தமான தொழிலை, கிட்டத்தட்ட 30 வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார். இதற்கிடையே, அவருக்கு பக்கவாதம் வந்து விட்டதால், 16 வயதிலேயே நிக்கியும், அவருடைய அம்மாவும் இணைந்து இந்த தொழிலுக்கு வந்து விட்டார்கள்.
ஆர்ட் கேலரி என்றவுடன் கடத்தல் பொருட்களையெல்லாம் விற்கிறார்களா என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்கு மிகவும் கலைத்தன்மை கொண்ட, விலை உயர்ந்த கலைப் பொருட்கள் வாங்கி விற்கப்படுகின்றன.