Thalapathy 69 : தளபதி 69 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. யார் அந்த நடிகை தெரியுமா?
Thalapathy 69 Update : தளபதி 69 படத்தில் நடிக்கும் மற்றோரு பிரபலம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தில், பிரபல நடிகை நடிப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை தெரிவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கப்போவதாக அறிவித்தார். 69 ஆவது படத்தில் நடத்த பின் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் படம் நடிப்பதில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய்யின் 69 ஆவது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததது
விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தை தீரன், துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தின் கதை அரசியலை மையப்படுத்தி அமைந்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியானது.
ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது
இந்நிலையில் நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்புகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்போது படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்றும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
