The GOAT OTT Release: “சிங்கம் கோட் ஆனதை பார்த்ததுண்டோ?.. விஜயமாகிறார் விஜய்.. ‘தி கோட்’ ஓடிடி தேதி இங்கே!-the goat ott release here when and where to watch vijay starrer action thriller online - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat Ott Release: “சிங்கம் கோட் ஆனதை பார்த்ததுண்டோ?.. விஜயமாகிறார் விஜய்.. ‘தி கோட்’ ஓடிடி தேதி இங்கே!

The GOAT OTT Release: “சிங்கம் கோட் ஆனதை பார்த்ததுண்டோ?.. விஜயமாகிறார் விஜய்.. ‘தி கோட்’ ஓடிடி தேதி இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 01, 2024 01:21 PM IST

The GOAT OTT Release: ‘தி கோட்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

The GOAT OTT Release: “சிங்கம் கோட் ஆனதை பார்த்ததுண்டோ?.. விஜயமாகிறார் விஜய்.. ‘தி கோட்’ ஓடிடி தேதி இங்கே!
The GOAT OTT Release: “சிங்கம் கோட் ஆனதை பார்த்ததுண்டோ?.. விஜயமாகிறார் விஜய்.. ‘தி கோட்’ ஓடிடி தேதி இங்கே!

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படம் வருகிற 3ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் இணையதளம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்து இருக்கிறது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், “ சிங்கம் எப்போதாவது கோட் ஆனதை பார்த்து இருக்கிறீர்களா? விஜயின் கோட் திரைப்படம், அக்டோபர் 3ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் வருகிறது.” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

தி கோட் படத்தின் கதை:

கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.

தி கோட் தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.