TVK Party: "வலிமையான அரசியல் களத்தை அமைப்போம்" தளபதி விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு - முழு விவரம்
TVK Party First General Meeting: தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TVK Party: தளபதி விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு தேதி அறிவுப்பு! எங்கு எப்போது?
தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு குறித்து கடந்த சில நாள்கள் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன.
இதையடுத்து கட்சியின் முதல் மாநாடு தேதி குறித்த அறிவிப்பை கட்சி தலைவர் தளபதி விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தவெக மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.