தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வெற்றியின் முடிவு; அதிர்ச்சியில் குடும்பம்; மீனாட்சி பொண்ணுங்க இன்று என்ன?

வெற்றியின் முடிவு; அதிர்ச்சியில் குடும்பம்; மீனாட்சி பொண்ணுங்க இன்று என்ன?

Priyadarshini R HT Tamil
Apr 11, 2023 11:56 AM IST

Meenakshi Ponnunga Serial Update : வெற்றி எடுத்த முடிவால் அதிர்ச்சியான குடும்பம், ஷக்தி என்ன செய்ய போகிறாள்? மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட்
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி குடித்துவிட்டு சக்தி வீட்டுக்கு வர, சக்தி வெற்றியை ரங்கநாயகி வீட்டுக்கு கூட்டி வருகிறாள்.

சக்தி தான் வெற்றியை குடிக்க வைத்தது என்று பூஜா சொல்ல, சக்தி மறுத்துவிட்டு, வெற்றியை தூங்க‌ வைக்கும்போது வெற்றியின் செயினும் சக்தியின் தாலியும் மாட்டிக்கொள்ள சக்தி பூஜாவிடம் இது சாமி போட்ட முடிச்சு என்கிறாள்.

மறுநாள் திடீரென வெற்றி யாரிடமும் சொல்லாமல் கடினமான பரிகார பூஜை செய்ய கோவிலில் தயாராக இருக்கிறான். திடியன் சக்திக்கு போன் செய்ய, சக்தி பதற்றத்துடன் கோவிலுக்கு வருகிறாள். அதே போல் ரங்கநாயகியும் பூஜாவும் கோவிலுக்கு வருகிறார்கள்.

கோயிலில் நெருப்பு வளையத்துக்குள் அமர்ந்து பரிகார பூஜை செய்ய வெற்றி தயாராக, அதைப் பார்த்து சக்தி அதிர்ச்சியாகி நிற்கிறாள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்