Radhika : ‘ராதிகா போட்டோ வரவே கூடாது..’ உறுதியாக இருந்த பாரதிராஜா.. ஒட்டுமொத்தமாக எதிர்த்த படக்குழு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radhika : ‘ராதிகா போட்டோ வரவே கூடாது..’ உறுதியாக இருந்த பாரதிராஜா.. ஒட்டுமொத்தமாக எதிர்த்த படக்குழு!

Radhika : ‘ராதிகா போட்டோ வரவே கூடாது..’ உறுதியாக இருந்த பாரதிராஜா.. ஒட்டுமொத்தமாக எதிர்த்த படக்குழு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 26, 2024 10:11 AM IST

Actress Radhika Sarathkumar : 1978 முதல் 1991 வரை ராதிகாவின் ஆண்டாக மாறியது. குறிப்பாக இன்று போய் நாளை வா திரைப்படம், அவருக்கு திருப்புமுனை. ரஜினியுடன் நடந்த போக்கிரி ராஜா, மகேந்திரன் இயக்கத்தில் வெளியான மெட்டி ஆகிய திரைப்படங்கள், ராதிகாவுக்கு குறிப்பிடும்பிடயான புகழை தந்தன.

Radhika : ‘ராதிகா போட்டோ வரவே கூடாது..’ உறுதியாக இருந்த பாரதிராஜா.. ஒட்டுமொத்தமாக எதிர்த்த படக்குழு!
Radhika : ‘ராதிகா போட்டோ வரவே கூடாது..’ உறுதியாக இருந்த பாரதிராஜா.. ஒட்டுமொத்தமாக எதிர்த்த படக்குழு!

தீர்க்கமாக இருந்த பாரதிராஜா

முதல் படமான 16 வயதினிலேயே மெகா ஹிட் அடித்திருந்த நேரத்தில், எந்த நடிகரிடம் போய் அவர் கதை சொன்னாலும் கால்ஷீட் கொடுத்திருப்பார்கள். அப்படியிருக்க எதற்கு புதுமுகங்கள்? என்கிற கவலை தான் அனைவருக்கும். ஆனால் பாரதிராஜாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதன் பின் நட்சத்திர தேர்வு நடந்தது. சென்னை வெங்கடேஸ்வர கல்யாண மண்டபத்தில் நடிகர்கள் தேர்வு நடந்தது. அதில் நடிகருக்கான தேர்வில் வந்தவர்களில் முக்கியமானவர், இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவியும் ஒருவர். பாராதிராஜா சிரஞ்சீவியை ரிஜக்ட் செய்து, சுதாகரை தேர்வு செய்தார்.

கதாநாயகன் கிடைத்துவிட்டார், கதாநாயகி கிடைக்கவில்லை. ஒருநாள் அம்மன் கிரியேஷன்ஸ் அலுவலகத்தில் ஆல்பம் ஒன்று வந்துள்ளது. அதை பாரதிராஜா புரட்டிய போது, அதில் இருந்த படத்தைப் பார்த்து ராதிகாவை பிடித்துப் போனது. அவரது வீட்டிற்குச் சென்று கேட்ட போது, ராதிகா மறுத்துவிட்டார். ஆனால், ராதிகாவின் தாய் கீதா தான், சமரசம் செய்து நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தார்.

ராதிகா போட்டோவை வெளியிட தடை

ராதிகா அப்போது பேண்ட் அணிந்து தான் இருப்பார். குண்டாக இருப்பார். அவருடைய போட்டோவை பத்திரிக்கையில் வெளியிடவே பயந்தார் பாரதிராஜா. சூட்டிங்கிற்காக புறப்பட்ட போது கூட தன் நண்பர்களிடம், ‘தப்பித்தவறி கூட இந்த புகைப்படத்தை பத்திரிக்கைகளில் கொடுத்துவிடாதே’ என்று கூறிவிட்டு தான், புறப்பட்டிருக்கிறார். அதன் பின் ராதிகாவை லொக்கேஷனுக்கு அழைத்துச் சென்றார் பாரதிராஜா. யாருமே ராதிகாவை ஏற்கவில்லை. குறிப்பாக பாக்யராஜ், ராதிகாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பாக்யராஜ்-பாரதிராஜா இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

நடிக்கத் தெரியாது, தமிழ் தெரியாது என எத்தனையோ குறைகளுடன் தான் ராதிகா அந்த திரைப்படத்தில் நடித்தார். பாரதிராஜாவிடம் ராதிகா வாங்காத திட்டு இல்லை. ஒவ்வொரு முறை திட்டுவாங்கும் போது, ‘விடுங்க.. நான் பேறேன்.. எனக்கு சினிமா செட் ஆகாது’ என்று ராதிகா அழுது புலம்புவது நடந்திருக்கிறது. அதையெல்லாம் கடந்து, தன் மீதான விமர்சனங்களை எல்லாம் அடித்து நொறுக்கி, தனித்துவமான நடிகை என்று பெயர் பெற்றார்.

கிழக்கே போகும் ரயில் படத்திற்குப் பின் ராதிகாவுக்கு படங்கள் குவிந்தன. 1978 முதல் 1991 வரை ராதிகாவின் ஆண்டாக மாறியது. குறிப்பாக இன்று போய் நாளை வா திரைப்படம், அவருக்கு திருப்புமுனை. ரஜினியுடன் நடந்த போக்கிரி ராஜா, மகேந்திரன் இயக்கத்தில் வெளியான மெட்டி ஆகிய திரைப்படங்கள், ராதிகாவுக்கு குறிப்பிடும்பிடயான புகழை தந்தன.

குறிப்பு: இந்த தகவல்கள், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிரப்பட்டவை.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.