Amarkalam : அஜித் ஷாலினி காதலுக்கு விதை போட்ட அமரக்களம்.. கத்தி வீசிய அஜித்.. காயமடைந்த ஷாலினி.. மாஸ் காட்டிய ரகுவரன்!-the film where ajith planted the seeds for shalinis marriage ajiths 25th film raghuvaran mas showed amarkalam - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amarkalam : அஜித் ஷாலினி காதலுக்கு விதை போட்ட அமரக்களம்.. கத்தி வீசிய அஜித்.. காயமடைந்த ஷாலினி.. மாஸ் காட்டிய ரகுவரன்!

Amarkalam : அஜித் ஷாலினி காதலுக்கு விதை போட்ட அமரக்களம்.. கத்தி வீசிய அஜித்.. காயமடைந்த ஷாலினி.. மாஸ் காட்டிய ரகுவரன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 15, 2024 12:01 PM IST

25 Years of Amarkalam : அமர்க்களம் அஜித் ஷாலினி இருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான படம் என்பதை விட அவர்களின் வாழ்க்கையை தீர்மானித்த படம் என்பதே பொறுத்தமாக இருக்கும். படத்தில் காதலிக்க தொடங்கிய அஜித் ஷாலினி ஜோடி அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்டனர்.

Amarkalam : அஜித் ஷாலினி திருமணத்திற்கு விதை போட்ட களம்.. அஜித்தின் 25 வது படம்.. ரகுவரன் மாஸ் காட்டிய அமர்க்களம்!
Amarkalam : அஜித் ஷாலினி திருமணத்திற்கு விதை போட்ட களம்.. அஜித்தின் 25 வது படம்.. ரகுவரன் மாஸ் காட்டிய அமர்க்களம்!

நடிகர்கள்

இந்த படத்தில் அஜித் வாசுவாகவும், ஷாலினி, மோகனாகவும், ரகுவரன் மோகனாவின் தந்தை துளசி தாஸாகவும், நாசர் போலீஸ் கமிஷனர் பிர்லா போஸாகவும், ராதிகா கங்கா கதாபாத்திரத்தில் மோகனாவின் தாயாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் அம்பிகா, வினு சக்ரவர்த்தி, தாமு, ரமேஷ் கண்ணா, சார்லி, வையாபுரி என நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.

ஷாலினி படத்திற்கு வந்த கதை

அமர்க்களம் படத்தில் முதலில் ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி நடத்தது. அது முடியாமல் போகவே படித்துக் கொண்டிருந்த ஷாலினியை அணுகினார் சரண். முதலில் நடிக்க மறுத்த ஷாலினி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் சில மாதங்களுக்கு பின் சம்மதித்தார். இதேபோல் படத்தில் ரகுவரனின் தேர்வு அல்டிமேட்டாக இருந்தது.

ஆரம்பத்தில் கொலைகள், சண்டைகள் வெட்டு, குத்து என திரியும் வாசுவிடம் துளசிதாஸ் தனது மகள் என தெரியாமல் முதலில் மோகனாவை கடத்தி சென்று காதலிப்பது போல் நடிக்க சொல்கிறார். வாசு அதற்கான முயற்சியில் இறங்கும் போது ஷாலினியால் அஜித் மாற்றப்பட்டாரா.. துளசி தாஸிற்கு மோகனா தனது மகள் என தெரியவந்தா என்பது தான் கதைக்களம்.

படம் முழுவதும் அஜித் தன் நெகட்டீவ் ரோலுக்கு தேவையான நடிப்பை கச்சிதமான வழங்கி இருந்தார். மோகனாவாகவே ஷாலினி படம் முழுவதும் வாழ்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதேபோல் ரகுவரனின் கேரியரில் அமர்க்களம் அட்டகாசமான படம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான முகத்தை கிஞ்சிற்றும் மாற்றாமல் தனது நெகட்டீவ் கேரக்டரில் நின்று விளையாடி இருந்தார். மொத்தத்தில் அஜித்தின் 25 ஆவது படம் அவருக்கு அட்டகாசமான வெற்றியை தந்தது.

அஜித் ஷாலினி காதலுக்கு விதை

அமர்க்களம் அஜித் ஷாலினி இருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான படம் என்பதை விட அவர்களின் வாழ்க்கையை தீர்மானித்த படம் என்பதே பொறுத்தமாக இருக்கும். படத்தில் காதலிக்க தொடங்கிய அஜித் ஷாலினி ஜோடி அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்டனர்.

காயமடைந்த ஷாலினி - பதறிய அஜித்

அமர்க்களம் படத்தின் 3வது நாள் ஷூட்டிங்கின் போது அஜித் கத்தியை வீசும் போது அது ஷாலினி கையில் பட்டு விட ரத்தம் வந்துள்ளது. இதனால் பதறிய அஜித் ஃபர்ஸ்ட் எய்டு கிட் எடுத்து வந்து உதவி பண்ணியிருந்தார். இதற்கிடையில் ஷாலினி மேல் இம்ப்ரஸ் ஆன அஜித், தன் காதலை சொல்ல, படப்பிடிப்புத்தளத்திலேயே ஓகே சொல்லியிருக்கிறார் ஷாலினி. இப்படித்தான் அவர்களது காதல் தொடங்கி திரை உலகில் இன்று சக்சஸ்புல் தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர்.

பாடல்

படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசை அமைத்திருந்தால். வைரமுத்து பாடல் எழுதி இருந்தார். சொந்த குரலில் பாட பாடலை நடிகை ஷாலினியே தனது சொந்த குரலில் பாடி அசத்தினார். இதேபோல் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சத்தம் இல்லாத இல்லாத தனிமை கேட்டேன்.. யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் பாடல் மிகவும் பிரபலமானது. தோல்வியை குறித்த பாடலும் அஜித் கேரியரில் வெற்றியாகவே அமைந்தது அவரின் அதிர்ஷ்டம். மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு, காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா என படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. அந்த நாட்களில் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. இப்படி 25 ஆண்டுகளை தொட்ட நிலையிலும் அமர்க்களம் படம் அஜித்தின் கேரியரில் இன்றும் அமர்க்களாமவே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.