ARRahman Vairamuthu: கவிதை மயக்கம் கொடுத்த வைரமுத்து; 25 வருடங்கள் மடியில் கிடந்த ரஹ்மான்-பிரிவுக்கு காரணம் சின்மயியா?
உண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் அதில் மயங்கி கிடந்தார் என்றே சொல்லலாம். இதனால் பிற பாடல் ஆசிரியர்களுக்கு ரஹ்மானிடம் பாடல் எழுதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது அவர்களுக்கு கோபத்தையும் உண்டாக்கி இருந்தது
ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி உடைந்ததற்கான காரணம் குறித்து திரைக்கடல் யூடியூப் சேனலுக்கு ராஜகம்பீரன் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான பயணம் ஆறு ஆண்டுகள் இருந்தது. அந்த நட்பில் விரிசல் ஏற்பட்ட உடன் வைரமுத்து ஏ ஆர் ரஹ்மானின் பக்கம் வந்தார்.
இளையராஜாவைப் பொறுத்தவரை, பாடல் வரிகளில் அவரது தலையீடானது இருக்கும். ஆனால் ரஹ்மானை பொறுத்த வரை, அந்த தலையீடானது இருக்காது. அதே நேரம் அவர் அதனை மேம்படுத்துவதற்கு என்ன செய்வது என்பதை பார்ப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக ஏ ஆர் ரஹ்மானை கவிதைகளின் ரசிகன்.
வைரமுத்து தான் எழுதிய ஒரு பாடலில் 12 வரிகள் இருக்கிறது என்றால், அதில் எட்டு வரிகளில் கவித்துவம் வருமாறு பார்த்துக்கொள்வார்.
உண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் அதில் மயங்கி கிடந்தார் என்றே சொல்லலாம். இதனால் பிற பாடல் ஆசிரியர்களுக்கு ரஹ்மானிடம் பாடல் எழுதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது அவர்களுக்கு கோபத்தையும் உண்டாக்கி இருந்தது
கிட்டத்தட்ட இந்த காம்போ 25 வருடங்களாக பயணித்தது அதன் பின்னர் தலைமுறை மாற்றத்தை முன்னிறுத்தி, ஏ ஆர் ரஹ்மான் அவரிடம் இருந்து சற்று விலகி, புது பாடல் ஆசிரியர்களுடன் வேலை பார்க்க ஆரம்பித்தார்.
வைரமுத்து உடனான விலகலுக்கு இன்னொரு காரணம், வேறு பாடல் ஆசிரியர்கள் தன்னிடம் பாடல் எழுதுவதற்கு இவர் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் நினைத்தார்.
ஆனால் வைரமுத்துவை பொறுத்தவரை, அவர் எப்போதும் தன்னை ஒரு புது பாடல் ஆசிரியருடன் போட்டி போடும் இளைஞனாகவே நினைத்துக் கொள்வார். அதே போல அவருக்கு புது பாடல் ஆசிரியர்களுடன் நட்பு இருந்த போதினும், யாரும் தன்னை முந்தவில்லை என்ற கர்வம் அவருக்கு ஆழமாக உண்டு.
இதில் சின்மயில் விவகாரத்தால்தான் ஏ ஆர் ரஹ்மான் வைரமுத்து கூட்டணி உடைந்திருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. சின்மயி போன்று, பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைக்கும் போது, அதில் உண்மையாக என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்