Shalini Ajith Kumar: ‘நான் பார்த்த முதல் முகம்’.. அம்மாவை அள்ளி அணைத்த ஆத்விக்! - ஷாலினி பகிர்ந்த நெகிழ்ச்சி போட்டோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shalini Ajith Kumar: ‘நான் பார்த்த முதல் முகம்’.. அம்மாவை அள்ளி அணைத்த ஆத்விக்! - ஷாலினி பகிர்ந்த நெகிழ்ச்சி போட்டோ!

Shalini Ajith Kumar: ‘நான் பார்த்த முதல் முகம்’.. அம்மாவை அள்ளி அணைத்த ஆத்விக்! - ஷாலினி பகிர்ந்த நெகிழ்ச்சி போட்டோ!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 19, 2024 12:05 PM IST

Shalini Ajith Kumar: ஷாலினி தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில், அவரின் மகனான ஆத்விக் அஜித்குமார், அவரை நெற்றியில் முத்தமிட்டு கொண்டு இருக்கிறார்.

Shalini Ajith Kumar: ‘நான் பார்த்த முதல் முகம்’.. அம்மாவை அள்ளி அணைத்த ஆத்விக்! - ஷாலினி பகிர்ந்த நெகிழ்ச்சி போட்டோ!
Shalini Ajith Kumar: ‘நான் பார்த்த முதல் முகம்’.. அம்மாவை அள்ளி அணைத்த ஆத்விக்! - ஷாலினி பகிர்ந்த நெகிழ்ச்சி போட்டோ!

அதில், மருத்துவமனையில் இருப்பதற்கான ஆடையை அணிந்து இருந்த ஷாலினியின் கையை அஜித் இறுகப்பற்றி இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அவர் நலமுற வேண்டும் என்று கமெண்டுகளை பதிவிட்டனர். இந்த நிலையில், ஷாலினி தற்போதும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில், அவரின் மகனான ஆத்விக் அஜித்குமார், அவரை முத்தமிட்டு கொண்டு இருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சொன்ன உடன் ஓகே சொன்ன ஷாலினி 

முன்னதாக, நடிகர் அஜித், சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ஜோடியாக நடித்தபோது எடுத்தபடம் தான், அமர்க்களம். இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித், தன் கையில் கத்தியை வைத்து அறுக்க முயற்சிக்கையில், அது உண்மையிலேயே அறுத்து விட்டதாம். இதனால், பதறிப்போன, ஷாலினி, அவரை நன்கு பார்த்துக்கொண்டாராம். இதில் இம்ப்ரஸ் ஆன அஜித், ஷாலினியிடம் தன் காதலை சொல்ல, படப்பிடிப்புத்தளத்திலேயே ஓகே சொல்லியிருக்கிறார். 

மேலும்,1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக எண்ணற்ற பரிசுப்பொருட்களை, இயக்குநர் சரண் மூலம் அஜித்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன அஜித் தனது காதல் குறித்து, தன் பெற்றோரிடமும் அஜித்தின் பெற்றோரிடமும் சொல்லி சம்மதம் பெற்றுள்ளார். 

பெரிய நடிகர் இல்லை

அப்போது அஜித் பெரிய நடிகராக இல்லையென்றாலும், மகள் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, ஷாலினியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார், ஷாலினியின் தந்தை. அதன்பின் ஏப்ரல் 24, 2000ஆம் ஆண்டு, சென்னையில் வைத்து அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகன்போல் அஜித்தின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அதன்பின், சினிமாவில் இருந்து விலகி, குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் காட்டினார், ஷாலினி.

அதன்பின் அஜித் வாழ்வில் கிடைத்த எண்ணற்ற ஏற்ற இறக்கங்கள், படத்தோல்விகள், இழிவுசொல்கள் இதையெல்லாம் இருவரும் சேர்ந்தே அனுபவித்தனர். அஜித்தும் மோட்டார் ரேஸில் ஈடுபட்டு என்ணற்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஆளானார். அஜித் - ஷாலினி தம்பதியினர் 8 ஆண்டுகளுக்குப்பின்னர், அனோஷ்கா என்னும் பெண் குழந்தையைப் பெற்றனர். அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து, ஆத்விக் என்னும் ஆண் குழந்தையை அஜித் - ஷாலினி தம்பதியினர் பெற்று எடுத்தனர். அமர்க்களம் படப்பிடிப்புத் தளத்தில், அஜித்தும் ஷாலினியும் காதலிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த மார்ச் மாதம் அது தொடர்பான விழாவை இருவரும் கொண்டாடினர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.