Vijay Ajith: அஜித்துக்காக கதறி அழுத விஜய்.. ஒன்று சேர்ந்த தல தளபதி.. ராஜாவின் பார்வையிலே-it has been 29 years since the release of the movie rajavin parvaiyile - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Ajith: அஜித்துக்காக கதறி அழுத விஜய்.. ஒன்று சேர்ந்த தல தளபதி.. ராஜாவின் பார்வையிலே

Vijay Ajith: அஜித்துக்காக கதறி அழுத விஜய்.. ஒன்று சேர்ந்த தல தளபதி.. ராஜாவின் பார்வையிலே

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 05, 2024 06:31 AM IST

Rajavin Parvaiyile: தல தளபதியாக உயர்ந்து நிற்கும் அஜித் மற்றும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. தற்போது இவர்கள் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என அனைவரும் சிந்தித்து கற்பனையில் வாழ்ந்து வருகின்றனர்.

அஜித்துக்காக கதறி அழுத விஜய்.. ஒன்று சேர்ந்த தல தளபதி.. ராஜாவின் பார்வையிலே
அஜித்துக்காக கதறி அழுத விஜய்.. ஒன்று சேர்ந்த தல தளபதி.. ராஜாவின் பார்வையிலே

தமிழ் சினிமாவில் முதலில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இவர்கள் இருவரும் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வந்தனர். அதற்குப் பிறகு கமல்ஹாசன் ரஜினிகாந்த் இவர்கள் இருவரும் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வந்தனர். அதற்குப் பிறகு இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்ட இரண்டு நடிகர்கள் யார் என்று கூறினால் அது அஜித்குமார் மற்றும் விஜய்.

தனித்தனியாக தற்போது உச்ச நட்சத்திரங்களாக இவர்கள் வளர்ந்திருந்தாலும் தற்போது தனி மார்க்கெட் உள்ள நடிகர்களாக இவர்கள் திகழ்ந்து வருகின்றனர். தற்போது இவர்கள் இணைந்து நடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக கருதப்படுகிறது.

இருப்பினும் ஆரம்ப காலகட்டத்தில் அனைத்து நடிகர்களுமே ஒன்று சேர்ந்து நடித்துள்ளார்கள். தல தளபதியாக உயர்ந்து நிற்கும் அஜித் மற்றும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. தற்போது இவர்கள் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என அனைவரும் சிந்தித்து கற்பனையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. நமது திரைப்பட வாழ்க்கையில் எந்த திரைப்படமாவது வெற்றி படமாக மாறுமா என அஜித் மற்றும் விஜய் ஏங்கிக் கொண்டிருந்த காலம் தான் அது.

இவர்கள் காலடி எடுத்து வைத்த 90களில் பல நடிகர்கள் கொடி கட்டி பறந்து வந்தனர். ரஜினி கமல் மட்டுமல்லாது விஜயகாந்த் சத்யராஜ் முரளி என உச்சத்தில் கொடி கட்டி பறந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் அஜித் மற்றும் விஜய் இருவருக்குமே போராட்டக் களமாக இருந்தது.

கதை

அப்படிப்பட்ட காலகட்டத்தில் வந்த திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே இந்த திரைப்படத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞனாக விஜய் இருப்பார். அங்கு இருக்கக்கூடிய பணக்கார பெண் ஒருவர் விஜய்யை விரும்புவார். ஆனால் அவருடைய காதலை விஜய் ஏற்றுக் கொள்ள மாட்டார். என்னுடைய காதலி ஏன் மறுக்கிறீர்கள் என்று அந்த பெண் கேட்கும் பொழுது முன்பு தனக்கு நடந்த கதை ஒன்றை கூற ஆரம்பிக்கிறார்.

ஒரே அறையில் வசிக்கும் நண்பர்களாக விஜய் மற்றும் அஜித் வாழ்ந்து வருகின்றனர். தன்னுடன் பேருந்தில் பயணம் செய்யும் பெண் ஒருவரை அஜித் விரும்புகிறார். அந்தப் பெண்ணும் அஜித்குமாரை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தங்களது வீட்டில் சொல்லும் மாப்பிள்ளை அந்த பெண் திருமணம் செய்து கொண்டு சென்று விடுகிறார்.

இதனால் வருத்தம் அடைந்த அஜித் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறார். தனது உயிர் நண்பனின் மரணத்திற்கு காரணம் இந்த காதல்தான் என கூறி விஜய் அந்த காதலை வெறுக்கிறார். இருப்பினும் காலம் செல்ல அந்த பணக்கார பெண் மீது விஜய்க்கு காதல் ஏற்படுகிறது.

பணக்கார பெண் என்பதனால் கட்டாயம் சிக்கல்கள் இருக்கும். அந்த பணக்கார குடும்பத்தார் கொடுக்கும் சிரமங்களை தாண்டி விஜய் அந்த பெண்ணை கைப்பிடிப்பது தான் இந்த ராஜாவின் பார்வையிலே திரைப்படம்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல வெற்றி பெற்றது. படத்தில் வடிவேலு, சாருஹாசன், ஜனகராஜ் என ஒரு மிகப்பெரிய பட்டாளமே நடித்திருக்கும். திரைப்படத்தின் நாயகியாக இந்திரஜா, காயத்ரி இவர்கள் இருவரும் நடித்திருப்பார்கள்.

தற்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வரும் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ராஜாவின் பார்வையிலே என்கின்ற காரணத்தினால் இன்று வரை அது தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றது.

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் சேர்ந்து நடித்த இந்த ராஜாவின் பார்வையிலே திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகளாகின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து கரம் பிடித்து ஒரே திரையில் நடித்திருப்பது இன்றுவரை பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அன்று கொண்டாடத் தவறப்பட்ட இந்த திரைப்படம் இவர்கள் இருவரும் உச்ச நட்சத்திரங்களாக வளர்ந்த பிறகு ராஜாவின் பார்வையிலே ஒரு அடையாளமாக மாறி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.