OTT Release : மக்களே..நீங்க இவ்வளவு நாள் எதிர்பார்த்த படம் வெளியாக போகுது.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் இதோ!
OTT Release : இந்த வாரம் தீபாவளி பண்டிகையும் வருகிறது. இதனால் சில சுவாரஸ்யமான திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளன.

இந்த வாரமும் (அக்டோபர் 28 - நவம்பர் 3) ஒரு சில திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இந்த வாரம் தீபாவளி பண்டிகையும் வருகிறது. இந்நிலையில் ஓடிடியில் சில சுவாரஸ்யமான படங்கள் வெளியாகிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.
லப்பர் பந்து
ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான இப்படத்தை கனா, எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும், நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதியவருமான தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆனது.
தங்கலான்
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக ஆன்லைனில் வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (பி.ஐ.எல்) தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ’லைவ் லா’ இணையதளம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் நெட்பிளிக்ஸில் இருந்து வரவில்லை.