தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Gv Prakash Is The Hero In The New Film Produced By Pa Ranjith

GV Prakash: பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவான ஜி.வி.பிரகாஷ்

Marimuthu M HT Tamil
Feb 29, 2024 12:07 PM IST

பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவான ஜி.வி.பிரகாஷ்
பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவான ஜி.வி.பிரகாஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் பா. இரஞ்சித் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்னும் படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்பின், மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகியப் படங்களை இயக்கி உச்ச இயக்குநராக உருவெடுத்தார். அவரது ஒவ்வொரு படங்களிலும் யதார்த்தமான காதலும் நுண் அரசியலும் சற்று தூக்கலாகவே இருக்கும். 

அப்படியிருக்க, நீலம் புரொடக்‌ஷன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, எண்ணற்ற தரமான படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 2018ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்னும் படத்தை முதன்முறையாகத் தயாரித்தார். அப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. அதன்பின், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி, ப்ளூ ஸ்டார் ஆகியப் படங்களைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வந்தார். ஒவ்வொரு படமும் வெவ்வேறு நிலப்பரப்பில் நிகழும் நுண் அரசியலை அம்பலப்படுத்தியது. இந்நிலையில் நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பில், ஜெ.பேபி, தண்டகாரண்யம் ஆகியப் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளன.

இந்நிலையில் பா. ரஞ்சித் தயாரிக்க, அவரிடம் உதவி இயக்குநராக இருந்த அகிரன் மோசஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. அதனை கிளாப் அடித்து பா.இரஞ்சித் தொடங்கி வைத்தார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ஷிவானி ராஜசேகர், பசுபதி, மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி, லிங்கேஷ், ஷ்வாந்த் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கான இசையை ஜி.வி.பிரகாஷ் செய்ய, ஒளிப்பதிவை ரூபேஷ் சாஜி செய்கிறார். எடிட்டிங்கை செல்வா ஆர்.கே.புரிகிறார்.

முன்னதாக, அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’திரைப்படம், பா.இரஞ்சித்துக்கு லாபம் ஈட்டித்தந்த படமாக இருந்தது. அடுத்து நீலம் புரொடக்‌ஷன் தயாரித்து ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ‘ஜெ.பேபி’என்னும் திரைப்படம், மார்ச் 8ஆம் தேதி திரைக்கு வரயிருக்கிறது. அதைத்தொடர்ந்து தண்டகாரண்யம் திரைப்படமும் பெயரிடப்படாத இந்தப் படமும் இன்னும் சில மாதங்களில் வெளியாவதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்