GV Prakash Saindhavi: இது தான் விஷயமா.. ஜி. வி. பிரகாஷ், சைந்தவி பிரிவுக்கு இது தான் காரணம்?
GV Prakash Saindhavi: நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமணவாழ்க்கையை முடித்து கொண்டு, ஜி. வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பிரிந்து உள்ளனர்.
GV Prakash Saindhavi: நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு, ஜி. வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பிரிந்து உள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் ஜி. வி . பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பிரிந்து விட்டதாக கூறி நேற்று ( மே 13 ) அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக பிரிவு
இது குறித்து அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ ஒருவருக்கொருவர் மேல் இருக்கும் பரஸ்பர மரியாதையை பேணுவதின் வாயிலாக, எங்களின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக, நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு, அவரவர் பாதைகளில் செல்ல முடிவெடுத்து இருக்கிறோம். எங்களது இந்த தனிப்பட்ட மாற்றத்தை ஊடகங்கள், ரசிகர்கள், நண்பர்கள் புரிந்து கொண்டு, எங்களது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.
11 ஆண்டுகளாக ஒன்றாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களின் பிரிவு ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஜி. வி. பிரகாஷ், சைந்தவி பிரிவுக்கு என்ன காரணம்
இந்நிலையில் ஜி. வி. பிரகாஷ் பாடகராக இருந்த வரை அவர்களின் காதல் வாழ்க்கை அழகாக இருந்ததது. ஆனால் அவர் நடிகராக மாறிய பிறகு பாடகி சைந்தவிக்கு தன் கணவர் மற்ற நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வருவது பிடிக்கவில்லையாம். மேலும் பல முறை சொல்லியும் ஜி. வி.பிரகாஷ் அதை கேட்காத காரணத்தினால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கள் பிரிந்து இருப்பதே சரி என நினைத்து இறுதியாக நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு இருக்கிறார்கள்.
அறிக்கையில் இதை கவனித்தீர்களா
இருவரும் தங்கள் அறிக்கையில், ” மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக “ பிரிந்து செல்ல முடிவு எடுத்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதனால் நடிப்பு தான் முக்கிய காரணமாக இருக்கும் என நெட்டிசன்கள் கணித்து உள்ளனர். முறையாக தாங்கள் ஏன் பிரிந்தோம் என்று, ஜி. வி. பிரகாஷ், சைந்தவி அறிவித்தால் தான் இதற்கு விடை தெரியும்.
முன்னதாக, பள்ளி நாட்களில் இருந்தே காதலித்து வந்த ஜி. வி. பிரகாஷ், சைந்தவி, கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதியன்று சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு தங்களின் பெண் குழந்தையை வரவேற்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்