தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay Politcs: அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. வீடு தேடி வரும் நூலகம்.. - விஜய் தரப்பு அதிகாரப்பூர்வ அறிக்கை!

Thalapathy Vijay Politcs: அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. வீடு தேடி வரும் நூலகம்.. - விஜய் தரப்பு அதிகாரப்பூர்வ அறிக்கை!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 17, 2023 01:16 PM IST

தளபதி விஜய் தன்னுடைய அரசியல் நகர்வை கையில் எடுத்திருக்கிறார்.

Thalapathy Vijay Politcs
Thalapathy Vijay Politcs

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் அவரது கட்டளைக்கு இணங்க, விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் காசோலையை வழங்கினார். 

விழா மேடைகளிலும் அரசியல் கருத்துக்களை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் தன்னுடைய அரசியல் பயணத்தில் அடுத்தக்கட்ட நகர்வை கையில் எடுத்திருக்கிறார். இது குறித்து விஜய் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில், “தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் பயிலகம் திட்டத்தினை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில்!

புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக "தளபதி விஜய் நூலகம்" திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் துவக்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் "தளபதி விஜய் நூலகம்" திட்டத்தினை துவக்கி வைக்கிறார்.

அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது என்பதனை அன்போடு

தெரிவித்துக்கொள்கிறேன்

இப்படிக்கு

புஸ்ஸி.N.ஆனந்து” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்