Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் 8 சீசனின் போட்டியாளர்கள் யார் யார்?.. வைரலாகும் முழு லிஸ்ட் இதோ!-tentative contestants list of bigg boss tamil season 8 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் 8 சீசனின் போட்டியாளர்கள் யார் யார்?.. வைரலாகும் முழு லிஸ்ட் இதோ!

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் 8 சீசனின் போட்டியாளர்கள் யார் யார்?.. வைரலாகும் முழு லிஸ்ட் இதோ!

Karthikeyan S HT Tamil
Aug 27, 2024 11:25 AM IST

Bigg Boss Tamil Season 8: பிரபல ரியாலிட்டு ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் 8 சீசனின் போட்டியாளர்கள் யார் யார்?.. வைரலாகும் முழு லிஸ்ட் இதோ!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் 8 சீசனின் போட்டியாளர்கள் யார் யார்?.. வைரலாகும் முழு லிஸ்ட் இதோ!

கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக ஒருபக்கமும், இன்னொரு பக்கம் நடிகை நயன்தாரா தொகுத்து வழங்க இருப்பதாகவும் கோலிவுட்டில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அடுத்த சீசன்

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவிருக்கும் சீசனை நடிகர் சரத்குமார்தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இருப்பினும், விஜய் டிவி தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, நடிகர் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிப்பரப்பான மாஸ்டர் செஃப், நம்ம ஊரு ஹீரோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்?

8வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்றும், 8வது சீசனின் போட்டியாளர்கள் யார் என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுக்க தொடங்கியுள்ள நிலையில் 8வது சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் என்று ஒரு லிஸ்ட் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த லிஸ்டில், டிடிஎப் வாசன், நடிகர்கள் ரஞ்சித், ரியாஸ் கான், நடிகை பூனம் பஜ்வா, மா கா பா ஆனந்த் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவர்கள் தான் உறுதியான பிக்பாஸ் போட்டியாளர்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஊகங்கள் உண்மைதானா என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா?
பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா?

கமல் ஹாசன் விலகல்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை நடிகர் கமல்ஹாசன் அறிக்கையாக வெளியிட்டு இருந்தார்.அந்த அறிக்கையில், சினிமாவில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள், அதற்காக உங்களுக்கு என் என்றென்றும் நன்றி இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உங்கள் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை." என்று தெரிவித்திருந்தார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.