தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Sethupathi: என் மக எனக்கு அம்மா.. அவன் அப்பா.. நான் அப்பா மாதிரி நடந்துக்கிட்டதே' - நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

Vijay sethupathi: என் மக எனக்கு அம்மா.. அவன் அப்பா.. நான் அப்பா மாதிரி நடந்துக்கிட்டதே' - நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 02, 2024 01:51 PM IST

Vijay sethupathi: “அவர்கள் என்னை அதிகாரம் செய்வார்கள். நான் தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களை அவர்களோடு கலந்து கொள்வேன்” - விஜய் சேதுபதி!

Vijay sethupathi: என் மக எனக்கு அம்மா.. அவன் அப்பா.. நான் அப்பா மாதிரி நடந்துக்கிட்டதே' - நெகிழ்ந்த விஜய் சேதுபதி!
Vijay sethupathi: என் மக எனக்கு அம்மா.. அவன் அப்பா.. நான் அப்பா மாதிரி நடந்துக்கிட்டதே' - நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

நடிக்ர் விஜய் சேதுபதி தனது குழந்தைகளிடம், தான் எப்போதும் ஒரு தந்தை போல நடந்து கொள்வதில்லை என்று பேசி இருக்கிறார். 

அவர்கள் என்னை அதிகாரம் செய்வார்கள்

இது குறித்து விஜய் சேதுபதி பேசும் போது, " நான் என்னுடைய மகனை அப்பா என்றும், மகளை அம்மா என்றுதான் அழைப்பேன். அவர்கள் என்னை அதிகாரம் செய்வார்கள். நான் தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களை அவர்களோடு கலந்து கொள்வேன். இன்னும் குறிப்பாக படத்தில் ஏதேனும் சுவாரசியமான சீனை ஷூட் செய்தோம் என்றால், அதை அவர்களிடம் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்பேன். எந்த விஷயமாக இருந்தாலும் நான் அவர்களிடமும் நான் கருத்துகளை கேட்பேன். நான் அவர்களின் அப்பா என்ற பிம்பத்தை நான் உருவாக்க வில்லை. சில சமயங்களில் நான் தான் குடும்பத்தில் குழந்தை போன்று தெரியும்." என்று பேசினார். 

50 வது படம் 

விஜய் சேதுபதியின் 50 வது படமாக கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் மகாராஜா. இ ந்தப் படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். மக்களிடம் நல்ல வரவரவேற்பை பெற்ற இந்தப்படம், 80 கோடியை தாண்டி வசல் செய்ததாக சொல்லப்படுகிறது.

திருட்டுக்கதை

இதனிடையே தயாரிப்பாளர் ஒருவர், தன்னுடைய கதையை திருடியே இயக்குநர் நித்திலன் மகாராஜா படத்தை எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டினர்

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, "மகாராஜா திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தின் கதை என்னுடைய கதையில் இருந்து திருடப்பட்டது. 2020 ம் ஆண்டே, இந்தக்கதை என்னிடம் வந்து பேசப்பட்ட கதை. உடனே நான் நித்திலனை, இந்தப்படத்தை குறும்படமாக எடுத்து வரச்சொன்னேன். அதற்கான பணத்தையும் கொடுத்தேன். அவரும் எடுத்து வந்தார். படம் சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் அதனை படமாக்குவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையே, என்னுடைய படமான அத்தியாயம் 1 படத்தை எடுப்பதற்கான வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டிருந்தேன். அதற்கான நடிகர்களுக்கான கால்சீட்களை வாங்கி வைத்திருந்தேன். ஆனால், குறுக்கே மழை வந்து விட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டேன். பின்னர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கினேன். ஷூட்டிங் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்னதாக, என்னுடைய படக்குழுவினர், என்னிடம் வந்து, உங்களது கதை, மகாராஜா என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.

தடுக்க ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து நான் படத்தை பார்க்கச் சென்றேன். படத்தை பார்த்த போது, அது முழுக்க முழுக்க என்னுடைய கதை என்பது அப்பட்டமாக தெரிந்தது. இந்தக்கதையை நான் பதிவு செய்து வைத்த காரணத்தால், நான் சங்க தலைவர்களான பாக்யராஜ் மற்றும் பாரதிராஜாவிடம் இது குறித்து கேட்டு, மனு அளித்தேன். ஆனால், என்னை போன்ற தயாரிப்பாளர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நடிகர் விஷால் உள்ளிட்ட சில நண்பர்கள் சிறு தயாரிப்பாளர்களை வளரவிடுங்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அப்படியான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. வேறு சிலரே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக்கதையினுடைய அம்சத்தை வைத்து பார்க்கும் போது, விஜய்சேதுபதி நன்றாக நடித்திருந்தார். தயாரிப்பாளரும் படத்தை நன்றாக தயாரித்திருந்தார். ஆனால் இயக்குநர் என்ற அந்த நாய் கதையை திருடிவிட்டது. அதற்கு ஆதாரம் உள்ளது.

நான் தான் பெயர் வைக்க வேண்டும்.

நான் பெற்ற பிள்ளைக்கு நான் தான் பெயர் வைக்க வேண்டும். சமூகத்தில் வாழ்த்தெரியாதவன் என் கதையை திருடிவிட்டான். ஒரு மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக கூட இதனை செய்து விட்டார்கள். இது என்னுடைய இரண்டாவது படமாக செய்ய இருந்தேன். படத்தின் கதையை சொன்ன போது, என்னை ஆசீர்வாதம் செய்தது நடிகர் ந்சார்லி. விரும்பி நடிக்க வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இந்தப்படத்தின் கதை சென்னையின் திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் மூலம் சென்று இருக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: