Kamal Haasan: அழியா புகழ்கொண்ட களத்தூர் கண்ணம்மா.. சகாப்தத்தை உருவாக்கிய திரைப்படம்.. கமல்ஹாசன் உதித்த களம்
Kamal Haasan: இந்த 64 ஆண்டுகளில் களத்தூர் கண்ணம்மா படத்தை பற்றி பேசும் போதெல்லாம் கமலையும், நடிகர் கமல்ஹாசன் பற்றி பேசும் போது எல்லாம் களத்தூர் கண்ணம்மா படத்தையும் பேச யாரும் தவறுவதில்லை என்பதே உண்மை.
Kalathur Kannamma: ஜெமினி கணேசன், சாவித்திரி, டி.எஸ் பாலையா நடிப்பில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் திரை உலகில் காலடி வைத்த களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியாகி இன்றோடு 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நாளில் அந்த திரைப்படம் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிகர் ஜெமினிகணேசன், சாவித்திரி, கமல்ஹாசன், டி.எஸ்.பாலையா, எஸ்.வி சுப்பையா தேவிகா, ஜாவர் சீதாராமன், குல தெய்வம்கோபால், ஆச்சி மனோரமா, எல்.விஜயலட்சுமி, எஸ்.ஆர், ஜானகி, அசோகன் என ஒரு நடிகர் பட்டாளமே நிறைந்திருந்தது.
இந்த படத்தின் கதை, திரை கதை வசனம் எழுதியவர் ஜாவர் சீதாராமன். இந்த படத்தை பீம் சிங் இயக்கி இருந்தார். எஸ்.பி.முத்து ராமன் இத்திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.
படத்திற்கான முன் தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த நாட்களில் ஏற்கனவே சிறுவன் பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட டெய்சி ராணி என்ற குழந்தைக்கு முன் பணம் தரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஏ.வி.எம் குடும்ப மருத்துவர் சாரா ராமச்சந்திரன் மூலம் 4 வயது கமல்ஹாசன் ஏ.வி.மெய்யப்பனிடம் அவரது வீட்டில் அறிமுகமானார். கமல் பலவிதமாக வசனம் பேசி ஆடிப் பாடி துருதுருவென நடித்து காட்டி உள்ளார் . இதனால் அந்த சிறுவனை பிடித்து விடவே கமலே அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இப்படித்தான் உலக நாயகன் தமிழ்சினிமாவில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என அப்பாவியான முகத்தோடு அறிமுகமானார். ஆனால் அந்த சிறுவன் இன்றும் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நிலையில் தன் ஆளுமையை செலுத்தி வருகிறார்.
கதை
ஜமீன்தாரின் மகனாக விளங்கக்கூடிய ஜெமினி கணேசன் விவசாயி மகள் சாவித்திரியை ரயில் பயணத்தின் போது காண்கின்றார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது அதன் பின்னர் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். ஜெமினி கணேசன் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அந்த நேரத்தில் சாவித்திரி கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுக்கிறார்.
அப்போது சாவித்திரியின் தந்தை அந்த குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டு சென்று விடுகிறார். சாவித்திரி இது குறித்து கேட்கும் பொழுது குழந்தை இறந்து விட்டதாக பொய் கூறி விடுகிறார். யாருக்கும் தெரியாமல் வேறு கிராமத்திற்கு குடி பெயர்ந்து செல்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் ஜெமினி கணேசன் கண்ணம்மாவை தேடி அலைந்து சோகத்தில் குடிக்கு அடிமையாகி விடுகிறார். அதன் பின்னர் சாவித்திரி ஆதரவற்றோடு இல்லத்தில் ஆசிரியராக சேர்கிறார். தன் குழந்தை இறந்துவிட்ட காரணத்தினால் அனைத்து குழந்தைகள் மீதும் சாவித்திரி எப்போதும் ஈர்போடு இருக்கிறார்.
அந்த இல்லத்தில் தான் கமல்ஹாசன் இருக்கின்றார். சாவித்திரிக்கு கமல்ஹாசன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. பள்ளி விழாவிற்கு வரும்பொழுது ஜெமினி கணேசனுக்கும் குழந்தையாக உள்ள கமல்ஹாசன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் பல்வேறு இடைஞ்சல்களுக்குப் பிறகு ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியோடு குழந்தை கமல்ஹாசன் சேர்கின்றார்.
வெற்றி
இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வர்த்தக ரீதியாகவும் வெற்றி கண்டது. அத்தோடு மட்டும் இன்றி 1960ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. நடிகர் கமல் ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக ஜனாபதியிடமிருந்து தங்க பதக்கம் பெற்றார்.
இப்படம் பின்னாளில் தெலுங்கு இந்தி, சிங்களம் போன்ற மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டது.
இந்த 64 ஆண்டுகளில் களத்தூர் கண்ணம்மா படத்தை பற்றி பேசும் போதெல்லாம் கமலையும், நடிகர் கமல் ஹாசன் பற்றி பேசும் போது எல்லாம் களத்தூர் கண்ணம்மா படத்தையும் பேச யாரும் தவறுவதில்லை என்பதே உண்மை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9