Bigg Boss Tamil 8: பிக்பாஸ் பந்தயம்.. முன்பின் ஏறும் கரன்சி பேரம்..பிக்பாஸ் தொகுப்பாளர் இவரா? - கோலிவுட் நிலவரம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil 8: பிக்பாஸ் பந்தயம்.. முன்பின் ஏறும் கரன்சி பேரம்..பிக்பாஸ் தொகுப்பாளர் இவரா? - கோலிவுட் நிலவரம் என்ன?

Bigg Boss Tamil 8: பிக்பாஸ் பந்தயம்.. முன்பின் ஏறும் கரன்சி பேரம்..பிக்பாஸ் தொகுப்பாளர் இவரா? - கோலிவுட் நிலவரம் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Aug 11, 2024 12:08 PM IST

Bigg Boss Tamil 8: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. - பிக்பாஸ் நிகழ்ச்சியை கைப்பற்ற போவது யார்? -கோலிவுட் நிலவரம் என்ன?

Bigg Boss Tamil 8: பிக்பாஸ் பந்தயம்.. முன்பின் ஏறும் கரன்சி பேரம்..பிக்பாஸ் தொகுப்பாளர் இவரா? - கோலிவுட் நிலவரம் என்ன?
Bigg Boss Tamil 8: பிக்பாஸ் பந்தயம்.. முன்பின் ஏறும் கரன்சி பேரம்..பிக்பாஸ் தொகுப்பாளர் இவரா? - கோலிவுட் நிலவரம் என்ன?

தொகுத்து வழங்கப்போவது யார்?

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக ஒருபக்கமும், இன்னொரு பக்கம் நடிகை நயன்தாரா தொகுத்து வழங்க இருப்பதாகவும் கோலிவுட்டில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சரத்குமார்தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இருப்பினும், விஜய் டிவி தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, நடிகர் விஜய் சேதுபதி சன்டிவியில் ஒளிப்பரப்பான மாஸ்டர் செஃப், நம்ம ஊரு ஹீரோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை நடிகர் கமல்ஹாசன் அறிக்கையாக வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில், சினிமாவில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அன்பான பார்வையாளர்களே,

7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள், அதற்காக உங்களுக்கு என் என்றென்றும் நன்றி இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உங்கள் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை.

தனிப்பட்ட முறையில், உங்கள் புரவலராக இருப்பது ஒரு வளமான சங்கமாக இருந்து வருகிறது, அங்கு நான் எனது கற்றலை நேர்மையாக பகிர்ந்து கொண்டேன். இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நாங்கள் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.