புஷ்பா பட நடிகர் மீது பாலியல், மோசடி வழக்கு! முன்னாள் முதலமைச்சராக நடித்தவர்! துணை நடிகையை திருமணம் செய்வதாக கசமுசா
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் கதாபாத்திரத்திலும், புஷ்பா படத்திலும் நடித்த நடிகர் மீது பாலியல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை நடிகையை திருமணம் செய்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து, நகை, பணத்தை பெற்றுக்கொண்டும் அவர் ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெகதீஷ் என்பவர் இளம் பெண் ஒருவர் மிரட்டியதால், அவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் அண்ணனாக மொல்லட்டி தர்மா தேஜ் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ஸ்ரீதேஜ் மீது பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றியதாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துணை நடிகை புகார்
தெலுங்கு சினிமாக்களில் வில்லன், துணை நடிகராக பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீதேஜ். 37 வயதாகும் இவர் துணை நடிகை ஒருவரிடம் பழகி வந்துள்ளார். இதையடுத்து அவரை திருமணம் செய்து கொள்வாக கூறி உறுதியளித்துள்ளார்.
இதை நம்பிய அந்த துணை நடிகை அவர் கேட்டபோது நகை, பணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கடந்த ஒரு ஆண்டாக அந்த பெண்ணுடன் இணைந்து கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த பெண்ணிடம் பழகுவதை ஸ்ரீதேஜ் தவிர்த்து வந்ததுள்ளாராம். இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஹைதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் நடிகர் ஸ்ரீதேஜ் மீது மோசடி, பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
மூன்று பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து கடந்த இரு நாள்களுக்கு முன் ஹைதராபாத் கச்சிபவுலி காவல் நிலையத்தில் மற்றொரு புகார் அளித்துள்ளார். இந்த புகார் குக்கட்பள்ளி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீதேஜ் மீது இந்திய தண்டனை சட்டம் 69, 115(2), and 318(2) என மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக பாலியல் புகார்
நடிகர் ஸ்ரீதேஜ் மீது இதே காவல் நிலையத்தில் ஏற்கனவே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமணமான பெண்ணுடன் கள்ள உறவில் வைத்திருந்ததாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவாக நடித்த ஸ்ரீதேஜ்
தெலுங்கில் வெளியான சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேஜ். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த என்டிஆர்: கதாநாயகடு, என்டிஆர்: மகாநாயகடு படத்தில். ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியாக நடித்திருந்தார்.
அதேபோல், என்டிஆரின் இரண்டாவது மனைவி என கூறப்பட்ட லட்சுமியுடனான அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய லட்சுமி என்டிஆர் படத்தில் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சரான சந்திரபாபு வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல் புஷ்பா முதல் பாகத்திலும், அடுத்த மாதம் வெளியாக இருக்கும் புஷ்பா 2 படத்திலும் நடித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் - 1094; மகளிர் ஹெல்ப்லைன் - 181 தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 7827170170; காவல் துறை பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091/1291
டாபிக்ஸ்