திரெளபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து.. ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திரெளபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து.. ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

திரெளபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து.. ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

Karthikeyan S HT Tamil
Jun 28, 2022 12:19 PM IST

“திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?” என டுவிட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

<p>ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு</p>
<p>ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு</p>

திரைப்படங்கள் மட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தார்.

அதில், "திரெளபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்? குறிப்பாக கௌரவர்கள் யார்?." என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தெலங்கானா பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான நாராயண ரெட்டி இயக்குநர் ராம்கோபால் வர்மாமீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராம் கோபால் வர்மா தன்னுடைய முந்தைய பதிவை மேற்கொள்காட்டி "மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் திரெளபதி. அந்த பெயர் மிகவும் அரிதானது என்பதால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை" என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்தநிலையில், லக்னௌவின் ஹஸ்ரத்கஞ்ச் கோல்வாலியில் சமூக சேவகர் மனோஜ் சின்ஹா என்பவர் ராம் கோபாலுக்கு எதிராக புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.