விஜய்யை மிஞ்சிய என்டிஆர்! உலக அளவில் அள்ளிய தேவரா பாக்ஸ் ஆபீஸ் வசூல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய்யை மிஞ்சிய என்டிஆர்! உலக அளவில் அள்ளிய தேவரா பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

விஜய்யை மிஞ்சிய என்டிஆர்! உலக அளவில் அள்ளிய தேவரா பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

Suguna Devi P HT Tamil
Oct 08, 2024 02:49 PM IST

தேவாரா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலகளவில் 11 நாட்களில் ரூ.466 கோடியைத் தாண்டியுள்ளது. இது விஜய்யின் தி கோட் படத்தை விட அதிகமாகும்.

விஜய்யை மிஞ்சிய என்டிஆர்! உலக அளவில் அள்ளிய தேவரா பாக்ஸ் ஆபீஸ் வசூல்!
விஜய்யை மிஞ்சிய என்டிஆர்! உலக அளவில் அள்ளிய தேவரா பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலிகான் நடித்து வெளியான ’தேவாரா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. தேவரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையில், படம் அதன் முதல் வாரத்தில் உலகளவில் ரூ .466 கோடியை மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் வசூலித்துள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப் அலிகான், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மேகா, டாம் ஷைன் சாக்கோ மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், படத்தின் முதல்நாளே ரூ.172 கோடியை ஈட்டியது.

ஜூனியர் என்.டி.ஆர் 

கடந்த ஆறுஆண்டுகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனியாக நடித்து வெளியான திரைப்படம், தேவரா. அவர் கடைசியாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரணுடன் சேர்ந்து நடித்து இருந்தார். 

தேவரா வெளியீட்டிற்குப் பின், தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க எக்ஸ் தளத்தில், "நான் காத்திருந்த அந்த நாள் இறுதியாக வந்துவிட்டது. உங்கள் நம்பமுடியாத பாஸிட்டிவ் பதில்களால் திக்குமுக்காடிப் போனேன். என் ரசிகர்கள் மூலம் தேவராவுக்கான கொண்டாட்டங்களைப் பார்ப்பது என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.உங்கள் அன்புக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் அதை அனுபவித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அனைவரையும் தொடர்ந்து மகிழ்விப்பேன் என்று உறுதியளிக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

 கதை 

சைஃப் அலிகான் பைராவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யாராலும் வெல்ல முடியாத மல்யுத்த வாத்தியாரான அவரது  உலகம் ஜூனியர் என்.டி.ஆரின் வருகையால் தலைகீழாக மாற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து  இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், தேவரா என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் அப்பகுதி ஆண்களை பல ஆண்டுகளாக சட்டவிரோத நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க மறுக்கிறார். கதை இவர்கள் இருவருக்கும் இடையில் நகர்கிறது. இறுதியில் தேவாரா வென்றாரா என நீளுகிறது. 

இது போன்ற கதைக்களத்தில் பல படங்கள் வந்துவிட்ட போது ம் தேவாரா அதன் திரைக்கதை, அனிரூத்தின் அதிரி புதிரி இசை என ரசிகர்களை மகிழவிக்கிறது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.