The GOAT: என்ன நண்பா ரெடியா? 'தி கோட்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு..ஆனால் ஒரு கண்டிஷன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat: என்ன நண்பா ரெடியா? 'தி கோட்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு..ஆனால் ஒரு கண்டிஷன்!

The GOAT: என்ன நண்பா ரெடியா? 'தி கோட்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு..ஆனால் ஒரு கண்டிஷன்!

Karthikeyan S HT Tamil
Sep 04, 2024 05:29 PM IST

The GOAT: நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை (செப்.5) ரிலீஸாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.

The GOAT: என்ன நண்பா ரெடியா? 'தி கோட்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு..ஆனால் ஒரு கண்டிஷன்!
The GOAT: என்ன நண்பா ரெடியா? 'தி கோட்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு..ஆனால் ஒரு கண்டிஷன்!

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

இந்த நிலையில் ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 5 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காலை 9 மணிக்கு முதல் காட்சி ஆரம்பம்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாரணையில், “ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘தி கோட்’ திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கோரப்பட்டது. அதன் அடிப்படையில், செப்டம்பர் 5-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஒரு சிறப்புக் காட்சியை தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. முறையான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிடலாம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதய் அண்ணாவுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர்

தி கோட் படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்த நிலையில், "தமிழ்நாடு அரசுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்றும் எப்போதுமே சினிமாவை வாழ வைக்க நினைக்கும் உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன்." என படத்தின் க்ரியேட்டிவ் புரொட்யூசரான அர்ச்சனா கல்பாத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்

'தி கோட்' திரைப்படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக விஜயுடன் இணைந்த வெங்கட் பிரபு

'தி கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் விஜய் இணைந்து உள்ளார்.

இரண்டு வேடங்களில் விஜய்

மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் தளபதி விஜய் நடித்துள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர், அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது உடல் அமைப்பு, தோற்றம், அசைவுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்தார். 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருப்பது ஆகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.