Venkat Prabhu OTT Movies: தி கோட் கொண்டாட்டம் முன் ஓடிடியில் என்ஜாய் செய்யக்கூடிய வெங்கட் பிரபு படங்கள் லிஸ்ட்-list of director venkat prabhu movies you can watch and enjoy in ott before the goat release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Venkat Prabhu Ott Movies: தி கோட் கொண்டாட்டம் முன் ஓடிடியில் என்ஜாய் செய்யக்கூடிய வெங்கட் பிரபு படங்கள் லிஸ்ட்

Venkat Prabhu OTT Movies: தி கோட் கொண்டாட்டம் முன் ஓடிடியில் என்ஜாய் செய்யக்கூடிய வெங்கட் பிரபு படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 04, 2024 10:52 AM IST

Venkat Prabhu OTT Movies: தி கோட் ரிலீஸ் கொண்டாட்டம் முன் ஓடிடியில் என்ஜாய் செய்யக்கூடிய வெங்கட் பிரபு இயக்கிய மாஸ் படங்களும், ஓடிடி வெப்சீரிஸ்களும் எவை என்பதை பார்க்கலாம்

Venkat Prabhu OTT Movies: தி கோட் கொண்டாட்டம் முன் ஓடிடியில் என்ஜாய் செய்யக்கூடிய வெங்கட் பிரபு படங்கள் லிஸ்ட்
Venkat Prabhu OTT Movies: தி கோட் கொண்டாட்டம் முன் ஓடிடியில் என்ஜாய் செய்யக்கூடிய வெங்கட் பிரபு படங்கள் லிஸ்ட்

காமெடி, காதல், பிரண்ட்ஷிப், எமோஷன், சென்டிமென்ட் என அனைத்து கலவைகளும் கலந்த ஜாலியான படங்களை கொடுத்துள்ள இவர் அஜித்குமார், சூர்யா, கார்த்தி, சிம்பு போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் கான்செப்டை தனது படங்களில் தொடர்ந்து பின்பற்றி வரும் இயக்குநராக இருந்து வரும் வெங்கட் பிரபு புதிய படமாக தளபதி விஜய் நடிப்பில் தி கோட் உருவாகியுள்ளது. மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.

சினிமாக்களை போல் ஓடிடி தளங்களிலும் தரமான வெப்தொடர்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஓடிடி வெப்சீரிஸ்கள் பற்றி பார்க்கலாம்

லைவ் டெலிகாஸ்ட்

காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி, பிரியிங்கா நாயர், டேனியல் ஆனி போப் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ஹாரர் த்ரில்லர் பாணியில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் வெப்சீரிஸ் லைவ் டெலிகாஸ்ட்.

கடந்த 2021இல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. 2005இல் எழுதப்பட்ட டைரி ஒன்றில் எழுதப்பட்டிருக்கும் சம்பவங்களை வைத்து நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை இந்த சீரிஸின் கதையாக அமைந்துள்ளது. மொத்தம் 7 எபிசோடுகளை கொண்டு தொடராக உள்ளது.

விக்டிம்

தமிழ் ஆன்தலஜி திரில்லர் சீரிஸாக வெளியான விக்டிம் - ஹூ எஸ் நெக்ஸ்ட்? நான்கு சிறு கதைகளை கொண்டதாக அமைந்திருந்தது.

இதில் கன்பெஷன் என்ற பகுதியை வெங்கட் பிரபு இயக்கியிருப்பார். இதில் அமலாபால், பிரசன்னா, கிரிஷ், அஞ்சனா கீர்த்தி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் கதை சோனி லைவ் ஓடிடி தளத்தில் 2022இல் வெளியானது.

மன்மதலீலை

அடல்ட் ஒன்லி பிளாக் காமெடி த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் மன்மதலீலை படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்த படம் நேரடியாக ஆஹா ஓடிடியில் வெளியானது.

மற்ற வெங்கட் பிரபு படங்களை போல் அல்லாமல் இந்த படத்தில் லிப் லாக், படுக்கயறை காட்சிகள் தூக்கலாக இடம்பிடித்திருந்தன. இருப்பினும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதுதவிர டாப் ஹீரோக்களை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படங்கள் எந்தெந்த ஓடிடியில் ஸ்டிரீம் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

மங்காத்தா

அஜித்குமாரின் 50வது படமான மங்காத்தா, 2011இல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் த்ரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, அஞ்சலி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த படம் அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது.

மாசு என்கிற மாசிலாமணி

சூர்யா - நயன்தாரா நடித்து ஹாரர் த்ரில்லர் படமாக வெங்கட் பிரபு இயக்கிய படம் மாசு என்கிற மாசிலாமணி. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சன் நெக்ஸ்ட், ஆப்பிள் டிவி, அமேசான் ப்ரைம் ஆகிய ஓடிடி தளங்களில் உள்ளது.

பிரியாணி

மங்காத்தா வெற்றிக்கு பின்னர் கார்த்தியை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் பிரியாணி. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த 100வது படமாக இது அமைந்தது.

இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

மாநாடு

சிம்புக்கு சிறப்பான கம்பேக் கொடுத்த படமாக மாநாடு அமைந்திருந்தது. வெங்கட் பிரபு இயக்கிய அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மாநாடு சோனி லைவ் ஓடிடி தளத்தில் உள்ளது.

வெங்கட் பிரபுவுக்கு மாஸ் ஹிட்டாக அமைந்த சென்னை 600028 படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், அதன் இரண்டாம் பாகமான சென்னை 600028 II அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம். அவரது மற்றொரு ஹிட் படமான சரோஜா அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.