Vijay: ‘விஜய் கருப்பா இருப்பார்;இவன் கூடல்லாம் நடிக்கணும்மான்னு.. தலையெழுத்துன்னு அடிச்சிக்கிட்டேன்’ - நடிகை பாலாம்பிகா!
Vijay: உண்மையில் நாளைய தீர்ப்பு படத்தில் நான் நடித்திருக்கலாம். ஆனால் எனக்குதான் அது கொடுத்து வைக்கவில்லை. பிராப்தம் என்ற ஒன்று இருக்கிறது. அது எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். -நடிகை பாலாம்பிகா!

Vijay: ‘விஜய் கருப்பா இருப்பார்;இவன் கூடல்லாம் நடிக்கணும்மான்னு.. தலையெழுத்துன்னு அடிச்சிக்கிட்டேன்’ - நடிகை பாலாம்பிகா!
நாளையத்தீர்ப்பு படத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு மிஸ்ஸானது குறித்து பிரபல நடிகையான பாலாம்பிகா வாவ் தமிழா சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
எனக்கு கொடுத்து வைக்க வில்லை
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் நாளைய தீர்ப்பு படத்தில் நான் நடித்திருக்கலாம். ஆனால் எனக்குதான் அது கொடுத்து வைக்கவில்லை. பிராப்தம் என்ற ஒன்று இருக்கிறது. அது எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். அதே நேரத்தில், சில விஷயங்களில், எல்லாவற்றிற்கும் நாம் ஒத்துச்சென்றும் செல்ல முடியாது.


