விஜய்-திரிஷா ஃபோட்டோ வெளியான விவகாரம்: மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப தமிழக பாஜக முடிவு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய்-திரிஷா ஃபோட்டோ வெளியான விவகாரம்: மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப தமிழக பாஜக முடிவு

விஜய்-திரிஷா ஃபோட்டோ வெளியான விவகாரம்: மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப தமிழக பாஜக முடிவு

Malavica Natarajan HT Tamil
Dec 18, 2024 09:49 PM IST

விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விஜய்- திரிஷா போட்டோ வெளியான விவகாரம் குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப தமிழகபாஜகமுடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

விஜய்-திரிஷா ஃபோட்டோ வெளியான விவகாரம்: மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப தமிழக பாஜக முடிவு
விஜய்-திரிஷா ஃபோட்டோ வெளியான விவகாரம்: மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்ப தமிழக பாஜக முடிவு

பிரைவேட் போட்டோ வெளியானது எப்படி?

இதற்கு பதிலளித்த அவர், "விஜய் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவர் சென்ற வாரம் கோவாவில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றார். அவர் விமான நிலையத்தில் கேட் நம்பர்6ல் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு ஒரு தனியார் விமானத்தில் பயணிக்கிறார். அவருடைய பிரைவேட் போட்டோ எப்படி வெளிவந்தது.

விஜய் யாருடன் வேண்டுமானாலும் போகலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். விஜய்யுடனும் யார் வேண்டுமானாலும் போகலாம். அதுவும் அவர்கள் விருப்பம். அந்த போட்டோவை வெளியிட்டது யார்.?

திமுக ஐடி விங் வேலையா?

அதனால் தான் நாங்கள் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதித்திராய சிந்தியாவிற்கு கடிதம் எழுத இருக்கின்றோம். அந்தப் போட்டோவை எடுத்தது யார்? வருவோர் போவோரை எல்லாம் போட்டோ எடுப்பது தான் ஸ்டேட் இன்டலிஜன்ஸ் வேலையா? போட்டோக்களை திமுக ஐடி விங்கிற்கு கொடுப்பது தான் வேலையா?

ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. அவர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக பேசினால் கூட, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவராக இதை சொல்கிறேன். இதுதான் நீங்கள் காட்டும் அரசியல் நாகரிகம். இதுதான் திமுக மக்களை மதிக்கும் விதம்.

எஃப் ஐ ஆர் போட வேண்டும்

யாரு எங்க போனாலும் போட்டோ எடுப்பீங்க. கல்யாணத்துக்கு போனா கூட போட்டோ எடுத்து லீக் பண்ணுவீங்க. இதனால் தான் விமானத்துறைக்கு கடிதம் அனுப்பி சிசிடிவி கோமராக்களை சோதனையிட சொல்கிறோம்.

யாரு போட்டோ எடுத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பின் அவர் அந்த போட்டோவை யாருக்கு அனுப்பினார் என்பதை விசாரித்து எஃப் ஐஆர் பதிய வேண்டும்.

விஜய் அரசியலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இனி அரசியலை உன்னிப்பாக பார்க்க வேண்டும். இத்தனை நாள் சினிமாவில் பிஸியாக இருந்திருக்கலாம். அதனால் 10 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகளை பார்த்தாரா என்பது தெரியவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டுகளாக அம்பேத்கர் சொன்னது போல ஆட்சி செய்தவர். பாஜகவை விமர்சிப்பவர்கள், எந்த இடத்தில் அம்பேத்கர் கொள்கைக்கு எதிராக பாஜக நடந்துகொண்டது என்பதை சரியாக பட்டியலிட்டு சொல்ல வேண்டும். வாய்கிழிய ட்வீட் போடும் உதயநிதி, ஒரு விஷயத்தையாவது எடுத்துக் கூறி இருக்க வேண்டும்.

அம்பேத்கர் சொன்னதை தான் செய்கிறோம்

அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை உள்ளது. அதைத்தான் நாங்கள் திரும்ப கொண்டு வருகிறோம். அது எப்படி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும்.

படித்த அரசியல்வாதிகள், பலமுறை தேர்தலில் வென்றவர், விஜய் உள்பட அனைவரும் பாஜகவிடம் குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்" என சவால் விட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.