திரிஷா விஜய் அப்பவே அப்படி.. சாய்பல்லவியிடம் இதைக்கேட்டிருக்கணும் - பத்திரிகையாளர் பிஸ்மி
திரிஷா விஜய் அப்பவே அப்படி.. சாய்பல்லவியிடம் இதைக்கேட்டிருக்கணும் என பத்திரிகையாளர் பிஸ்மி பேசியுள்ளார்.
திரிஷாவும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்றும்; சாய் பல்லவியிடம் கேட்டுவிட்டு இதைச் செய்திருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேசியுள்ளார்.
வலைப்பேச்சு பிஸ்மி ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ நான் வெஜ் சாப்பிடாமல் ராமாயணம் படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வெளியானதற்கு சாய்பல்லவி கோபப்படக் காரணம் இதுதான்.
பக்தி படங்கள் தயார் ஆகும்போது எல்லாம் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு பிரஸ் ரிலீஸைக் கொடுப்பாங்க, அதில் தவறாக இடம்பெறும் வார்த்தை என்னவென்றால், கே.ஆர். விஜயா 48 நாட்கள் விரதமிருந்து தான் நடிக்குறாங்கன்னு ஒரு நியூஸ் வரும். இப்படி பக்திப்படம் அப்படியென்றாலே, இது ஒரு டெம்பிளேட். அப்போது எல்லாம், நான் என்னங்க இப்படியெல்லாம் நியூஸ் தர்றாங்கன்னு பி.ஆர்.ஓவை திட்டுவேன். இதனால் படம் ஓடிடுமா எனக்கேள்வி கேட்பேன். இது இந்த தலைமுறை பத்திரிகையாளர்களாவது, சாய் பல்லவியிடம் உறுதிபடுத்திட்டு எழுதியிருக்கலாம்.
மக்களுக்கு இது எல்லாம் தெரியும். என்னைப் பொறுத்தவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் ஊடகங்கள் பேசக்கூடாது. உதாரணத்துக்கு, சமீபகாலமாக நான் தான் திரிஷா புருஷன் என்று பேட்டிகொடுத்தால், அதை அப்படியே அவரிடம் பேட்டி எடுத்து போடும் அளவுக்கு ஊடகங்கள் மாறிவிட்டன. இது வெட்கக்கேடான செயல்.
பத்திரிகையாளர்கள் வியூஸ்க்காக வேலை செய்யக்கூடாது - பிஸ்மி
அதைவிட்டுட்டு பத்திரிகையாளர்கள் அதற்குண்டான ஆதாரத்தைக் கொடுங்கன்னு கேட்கணும். புகைப்பட ஆதாரம் இருக்கா, ஏதாவது பதிவு இருக்கான்னு தானே கேட்கணும்.
இப்போது அந்த முட்டாள் பத்திரிகையாளன், கிசுகிசுவை சொல்பவரை வாயைப் பிளந்துகேட்டுக்கொண்டு இருக்கிறார். இதுதொடர்பாக எனது நண்பர் திரிஷாவின் அம்மாவிடம் சொன்னபோது, அவர்கள் அந்நபரை பெரிய ஆள் ஆக்க விரும்பவில்லைன்னு சொல்றாங்க.
இப்படி பாதிக்கப்படுபவர்கள் ஒதுங்கிபோவதால் தான் போலியானவர்கள் யூட்யூபில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். பாரம்பரிய பத்திரிகைகள் காலகட்டத்தில் இத்தகைய ஆட்கள் அந்த பத்திரிகை கேட்டுக்குள் கூட போகமுடியாது. இது யூட்யூப் காலம் என்பதால் வியூஸுக்காக பேசுறாங்க. இன்னும் சிலர் பத்திரிகையாளர் என்னும் போர்வையில் அமர்ந்து அவன் இப்படி, இவன் இப்படின்னு பேசிட்டு இருக்காங்க. கேமரா ஆன் பண்ணு. வியூஸ் வந்தால் போதும் என்ற போக்கு இருக்கு.
என்னைக்கேட்டால் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கணும். நடிகர் - நடிகை திருமணம் என்றால், திருமண செய்தியைப் போடலாம். விவாகரத்து என்றால், அவர்கள் தருவதைப் போடலாம். அதைவிட்டுட்டு ஏன் விவாகரத்து, இவர் யார் பின்னாடி போனாங்க அப்படிங்கிற புலனாய்வு அவசியம் இல்லாதது. ரொம்ப அருவருப்பானது.
இப்படிப்பட்ட சில நபர்களால் மக்களும் எங்களை அப்படித்தான் பார்ப்பாங்க. எனவே, இதுபோன்ற கழிவுகளை அகற்றணும்.
அவர் ஒரு பெண் அப்படிங்கிறதால் தான் இப்படி முடிச்சு போடமுடியுது. விஜய் கூட அவரோட டிரைவர் ராஜேந்திரன், மேனேஜர் ஜகதீஷ் ஆகியோரும் போயிருக்காங்க. அந்த ராஜேந்திரனை மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு கொடுக்கும்போதுகூட மேடையில் கவுரவப்படுத்தியிருப்பார், விஜய். அப்படிப்பட்ட ராஜேந்திரனை பாஜகவைச் சார்ந்தவர் என திமுகவினர் போலிக் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர்.
திரிஷாவும் விஜய்யும் ஒன்றாகப் பயணித்தது பற்றி விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு கேட்க உரிமை இருக்கு. திரிஷாவின் அம்மா திரிஷாவிடம் கேட்க உரிமை இருக்கு. அதைவிட்டுவிட்டு நீங்களும் நானும்பேசுறது தவறுன்னு தான் நான் பார்ப்பேன்’’என சொல்லி முடித்தார், பத்திரிகையாளர் பிஸ்மி
நன்றி: வலைப்பேச்சு பிஸ்மி, ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனல்
டாபிக்ஸ்