71 Years of Thirumbi Paar: பெண்கள் மீது விடாத ஆசை!நெகடிவ் கேரக்டரில் கலக்கிய சிவாஜி கணேசன் - தமிழில் சிறந்த அரசியல் படம்
பெண்கள் மீது ஆசை கொண்டவராக நெகடிவ் கேரக்டரில் கலக்கிய சிவாஜி கணேசன் சினிமா கேரியரில் முக்கிய படமாக திரும்பிப்பார் உள்ளது. கலைஞர் மு. கருணாநிதியின் கதை மற்றும் அரசியில் நய்யாண்டியுடன் கூடிய ஷார்ப் வசனங்கள் தமிழில் சிறந்த அரசியல் டிராமா படமாக இந்த படத்தை மாற்றியது.

பெண்கள் மீது விடாத ஆசை, நெகடிவ் கேரக்டரில் கலக்கிய சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாக்களின் வழியே திராவிட கட்சிகளின் வரலாறு மக்களை சென்றடைந்த வரலாறு உள்ளது. அப்படியான ஒரு படமாக திமுக, அப்போது ஆட்சி கட்டிலில் இருந்த காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும், நய்யாண்டி செய்து வெளியான படம்தான் திரும்பிப்பார்.
பராசக்தி வெற்றிக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி கதை, வசனத்தில், சிவாஜி கணேசன் மீண்டும் நடித்த படமாக திரும்பிப்பார் உள்ளது.
மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில் டி. ஆர். சுந்தரம் இயக்கிய இந்த படம் சிவாஜி கணேசனின் இரண்டாவது படமாகும். படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவாஜி, க்ளைமாக்கிஸ் திருந்துவது போல் கதை அமைந்திருக்கும்.