HBD Goundamani: ஹீரோக்களை தெறித்து ஓட விட்ட காமெடி கிங் கவுண்டமணி! தமிழ் சினிமா ரசிகர்கள் கவலை மறக்கும் டானிக்
ஆன் ஸ்கிரீனிலும் சரி, ஆஃப் ஸ்கிரீனிலும் சரி ஹீரோக்களையும் தனது கலாய்ப்பு பேச்சால் தெறித்து ஓட வைத்த காமெடியனாக திகழ்ந்தவர் கவுண்டமணி. தமிழ் மக்களின் கவலையை மறக்கடிக்க செய்யும் அற்புத டானிக்காக என்றென்றும் நிலைத்து நிற்கும் காமெடிக்களை தந்தவராக இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது காமெடியால் அனைத்து தரப்பு வயதினரையும் நாள்தோறும் சிரிக்க வைக்கும் மகானாக இருப்பவர் கவுண்டமணி. கோவையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து கோலோச்சியிரும் கலைஞர்களில் ஒருவராக இருப்பவர் கவுண்டமணி.
காமெடி மட்டுமில்லாமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் தனது அற்புத நடிப்பாலும், கவுண்டர்களாலும் முத்திரை பதித்தவராக இருந்து வருகிறார். அடிப்படையில் மேடை நாடக கலைஞராக இருந்து பின்னர் சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்தவர் கவுண்டமணி
பாக்யராஜ் சிரிப்பால் ஒளிர்ந்த கவுண்டமணி வாழ்க்கை
நாகேஷின் சர்வர் சுந்தரம் படத்திலேயே ஒரு சீனுக்கு வந்து போகும் டிரைவராக சிறிய கேரக்டரில் தோன்றியிருப்பார் கவுண்டமணி. இதன் பின்னர் சிவாஜி கணேசன் நடித்த ராமன் எத்தனை ராமனடி, தேனும் பாலும் படங்களிலும் அதை ட்ரைவர் வேடம். போகிற போக்கில் வந்து போகும் கதாபாத்திரத்தில் வந்த கவுண்டமணிக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை பெற்று தந்த மக்கள் மனங்களில் பதிய காரணமாக இருந்தவர் இயக்குநர், நடிகர், பாக்யராஜ்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் ரஜினியின் எடுபுடியாக வந்தாலும், கிழக்கே போகும் ரயில் படம் தான் கவுண்டமணி சினிமா கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்தியது. அந்த படத்தில் இவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர்கள் ஆடிஷன் செய்யப்பட்டனர். அதில் கவுண்டமணியும் ஒருவராக இருந்தார்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு, கவுண்டமணியை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க விருப்பம் இல்லை. வேண்டா வெறுப்பாக கவுண்டமணி ஆடிஷன் காட்சியை அவர் பார்த்தபோது பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த பாக்யராஜ், பாலகுரு ஆகியோர் பலமாக சிரித்து காட்டியதுடன், கவுண்டமணிக்க வாய்ப்பை பெற்று தர வேண்டும் என உறுதியாக இருந்தனர்.
உதவி இயக்குநர்கள், தயாரிப்பாளர் என அனைவரும் கவுண்டமணிக்கு ஆதரவு குரல் கொடுக்க, வேறு வழியின்றி பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் கவுண்டமணி நடித்த ராமையா கேரக்டர் தான், அவரை வேறொரு உயரத்துக்கு அழைத்து சென்றது.
கவுண்டமணி - செந்தில் காம்போ
கவுண்டமணி போல் நாடக கலைஞராக இருந்த செந்திலுக்கும் வாய்ப்பு பெற்று தந்தவராக பாக்யராஜ் இருந்தார். பின்னாளில் கவுண்டமணி - செந்தில் காம்போ இணைந்து பல அற்புதமான காமெடிகளால் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஹாலிவுட்டில் லாரன் - ஹார்டி போல் தமிழில் கவுண்டமணி - செந்தில் இரட்டை காமெடியர்களாக கொண்டாடப்பட்டனர்.
ஹீரோக்களை தெறித்து ஓடவிட்ட கவுண்டமணி
காமெடியில் எந்த தயவும், தயக்கமும் இல்லாமல் யாராக இருந்தாலும் துணிச்சலாக நக்கல், நய்யாண்டி செய்யும் காமெடியனாக தன்னை முன்னிருந்தியவர் கவுண்டமணி. காமெடி கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர் தமிழ் சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார். சொல்லப்போனால் ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு வரையிலான தலைமுறை ஹீரோக்களுடன் நடித்திருப்பதோடு அனைவரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பதும், நக்கல் அடிப்பதுமாக இருந்துள்ளார். சினிமாக்களில் ஹீரோவை நக்கடித்து ஜனங்களை சிரிக்க வைத்த காமெடியன் என்றால் அது கவுண்டமணி தான்.
இது ஆன் ஸ்கிரீனிலும் சரி, ஆஃப் ஸ்கிரீனிலும் சரி ஹீரோக்களையும் தனது கலாய்ப்பு பேச்சால் தெறித்து ஓட வைத்துள்ளார். கவுண்டமணியை நடிக்க வைத்தால் நம்மை காமெடியால் ஓவர்டேக் செய்வது மட்டுமில்லாமல், இமேஜையும் டம்மி ஆக்கி விடுவார் என்ற பயந்தே அவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் கழட்டி விட்டவர்கள் நடிகர்கள் பலரும் இரு்க்கிறார். அவர்கள் நினைத்தது நிஜம் தான் என்பது போல் கவுண்மணி பிரேமில் வந்தாலே சிரிப்பு மழையும், கைதட்டல்களும் இருந்தன.
டைமிங், ரைமிங், தீர்க்கதரிசனம்
கவுண்டமணியின் காமெடியில் கவுண்டர் டயலாக்குகள் அதிகமாக இருக்கும். அத்தோடு நில்லாமல் தனது பாடி லாங்குவேஜ், கெட்டப், லுக் போன்றவற்றாலும் கலகலப்பூட்டியுள்ளார். நாட்டு நடப்பை புட்டு புட்டு வைக்கும் விதமாக சில காமெடிகள் தீர்க்கதரிசனமாகவும் இருந்துள்ளன. சமூக அரசியல் விமர்சனங்களையும் நகைச்சுவையுடன் கலந்து பல படங்களில் கொடுத்திருக்கிறார். குபீர் சிரிப்பை வரவழைக்கும் டைமிங், ரைமிங் காமெடியை வெளிப்படுத்துவதிலும் வல்லவராக இருந்துள்ளார். மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்வதிலும், வில்லனை டம்மியாக்குவதில் அவரது நகைச்சுவை ட்ரேட் மார்க்காக இருந்துள்ளன.
தமிழ் மக்களின் கவலையை மறக்கடிக்க செய்யும் டானிக்காக கவுண்டமணியின் காமெடிக்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். காமெடி கிங், காமெடி மகான், நகைச்சுவை மாமன்னன், காமெடி லெஜெண்ட் என பல பெயர்களால் ரசிகர்களால் கொண்டாடப்படும் கவுண்ட மணிக்கு இன்று 85வது பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்