Karthik Subbaraj: அப்ப வாடிவாசல் கதி.. பிரபல இயக்குநரை கமிட் செய்த சூர்யா! - சூர்யா 44 படத்தை இயக்கப்போவது இவர்தான்!
சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூர்யாவின் 44 வது திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
“ இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ நான் என்னுடைய அடுத்தப்படத்தில் எப்போதும் அழகாக இருக்கும் சூர்யாவுடன் சாருடன் இணைய இருக்கிறேன்” பதிவிட்டு இருக்கிறார்.
இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் ‘love laughter war’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
வில்லனாக அண்மையில் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.
இந்தப்படம் குறித்து முன்னதாக பேட்டியளித்த சிறுத்தை சிவா, “சூர்யா சாருடன் பணிபுரிந்தது அருமையான அனுபவம். அவர் ஒரு சிறந்த நடிகர்; ஒரு சிறந்த மனிதர்; அவருடன் வேலை பார்த்தது வசதியாக இருக்கிறது.
அவர் எங்களின் வேலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மொத்த குழுவும் இந்த வாய்ப்பை எப்படியான ஒரு வாய்ப்பு என்பதை உணர்ந்து இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இந்த கதையை நம்பி என்னுடைய விஷனை பெரிய திரையில் கொண்டு வர விரும்பி இருக்கிறார்கள்.” என்றார்.
இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கால் பதித்து இருக்கும் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். மேலும் அவர் தனக்கு இது தனித்துவமான அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். போஸ்டரில் காண்பிக்கப்பட்டு இருக்கும் கழுகு, டைட்டில் அறிவிப்பு வீடியோவில் வந்த நாய் மற்றும் குதிரை ஆகியவற்றுக்கு படத்தின் கதையில் சம்பந்தம் இருக்கிறது” என்றார்
இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போதே சூர்யா - சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்க கமிட் ஆனார். இதனிடையே அந்தப்படம் படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே சூர்யா கமிட் ஆன வாடிவாசல் திரைப்படத்தின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்