Suriya: அண்ணன் தந்த கட்டிப்பிடி வைத்தியம்..உங்களுக்கு என்ன கவலை? சூர்யா, கார்த்தி கலகல பேச்சு
Suriya: திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள், கதையை மட்டும் என்ஜாய் பண்ணுங்க. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பத்தி உங்களுக்கு என்ன கவலை? என மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா நெத்தியடி பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். விழாவில் அண்ணா சூர்யா தந்த கட்டிப்பிடி வைத்தியம் பற்றி நடிகர் கார்த்தி கூறினார்.
கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்பட பலர் நடித்திருக்கும் படம் மெய்யழகன். கிராமத்து பின்னணியில் பேமிலி கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தை 96 படப்புகழ் பிரேம் குமார் இயக்கியுள்ளார். படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இதன் விடியோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்று பேசினார், அப்போது அவர் மெய்யழகன் படத்தை தயாரித்தது ஏன் என்பதையும், ரசிகர்கள் படத்தின் வசூலில் கவனம் செலுத்தி சண்டையிடுவதை விட படத்தின் கதையையும், கேரக்டர்களையும் கொண்டாட வேண்டும் என பேசினார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் உங்களது கவலை இல்லை
"திரைப்படங்களைப் பார்த்து, அதன் கதை மற்றும் கதாபாத்திரங்களுக்காக அவற்றை கொண்டாடுங்கள். மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி அதிகம் கவலைப்படுவதையும் மற்றவர்களுடன் சண்டையிடுவதையும் தவிருங்கள். சினிமாக்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உங்களது கவலையாகவே இருக்ககூடாது.
மெய்யழகன் பட கதை எனக்கு வந்திருந்தால் மரியாதை நான் தயாரிக்கிறேன், கார்த்தி நடிக்கட்டும் என பெருந்தன்மையாக கூற வில்லை. அதுதான் உண்மை. என்னால் இந்த மாதிர படம் நடித்திருக்கவே முடியாது. அவரது ப்ரோமேன்ஸ் பார்த்து பொறாமையாக இருந்தது" என்றார்.
அண்ணன் தந்த கட்டிப்படி வைத்தியம்
நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது, மெய்யழகன் பாத்துவிட்டு தனது அண்ணனும், நடிகருமான சூர்யா தனக்கு கட்டிப்பிடி வைத்தியம் அளித்து பற்றி கூறினார். "இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, நான் சாப்பிட்டு கொண்டிருக்கையில் அவர் (சூர்யா) என்னிடம் வந்து, அப்படியே என்னைக் கட்டிப்பிடித்தார்.
பருத்திவீரனில் நான் அறிமுகமானதில் இருந்து இந்த மாதிரி அவர் செய்தது இல்லை. எனவே மெய்யழகன் எனக்கு ஸ்பெஷலான படமாகவே உள்ளது.
இந்த படத்தில் நடிக்கும்போது அண்ணன் அடிக்கடி செட்டுக்கு வந்து பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்" என்றார்.
சென்சார் செய்யப்பட்ட மெய்யழகன்
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக மெய்யழகன் உள்ளது. இந்த படம் சென்சார் செய்யப்பட்டிருக்கும் நிலையில் எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் வரை உள்ளதாக கூறப்படுகிறது.
மெய்யழகன் ரிலீஸ்
கார்த்தியின் 27வது படமாக உருவாகியிருக்கும் மெய்யழகன் படத்தில் தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி உள்பட பலரும் நடித்துள்ளார். தமிழில் ஆக்சன், த்ரில்லர் என ரத்தம் தெறிக்க வந்து கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் ஃபீல் குட் திரைப்படமாக மெய்யழகன் உருவாகியுள்ளது. படத்துக்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதேநாளில் ஜுனியர் என்டிஆர் நடித்த தேவரா: பார்ட் 1 படமும் வெளியாகிறது.
முன்னதாக, மெய்யழகன் படம் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மே மாதம் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் போது படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதை வெளியிட்ட நடிகர் சூர்யா, "எங்கள் இதயத்திலிருந்து வரும் ஒரு படைப்பு!" என்று குறிப்பிட்டிருந்தார்.
கார்த்தி புதிய படங்கள்
கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தனது சூப்பர் ஹிட் படமான சர்தார் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் சர்தார் 2 படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி. எஸ். மித்ரன் இயக்குகிறார்.