Suriya Movies in OTT: கங்குவா ரிலீஸுக்கு முன் ஓடிடியில் பார்த்து ரசிக்க வேண்டிய சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள் லிஸ்ட்
Suriya Action Thriller Movies in OTT: கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யா படங்கள் எதுவும் வெளியாகிவில்லை. அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்குவா ரிலீஸுக்கு முன் ஓடிடியில் பார்த்து ரசிக்க வேண்டிய சூர்யா நடித்த சூப்பர் ஹிட் ஆக்ஷன் த்ரில்லர் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

Suriya Movies in OTT: கங்குவா ரிலீஸுக்கு முன் ஓடிடியில் பார்த்து ரசிக்க வேண்டிய சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள் லிஸ்ட்
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எட்டுத்திக்கும் துணிந்தவன். கடந்த 2022இல் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதுடன் நல்ல வசூலையும் குவித்தது.
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின் கதை அமைந்திருக்கும். படத்தில் வழக்கறிஞராக வரும் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா
இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் பேண்டஸி ஆக்ஷன் பாணியில் உருவாகியிருக்கும் கங்குவா என்ற படத்தில் சூர்யா நடித்துள்ளார். பாலிவுட் நாயகி திஷா பதானி இந்த படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.