Karthi29: பீரியாடிக் ஜானர்.. வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் கைகோர்த்த கார்த்தி! - முழு விபரம்!-dream warrior pictures announced their next magnum opus karthi29 with taanakkaran director tamizh - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthi29: பீரியாடிக் ஜானர்.. வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் கைகோர்த்த கார்த்தி! - முழு விபரம்!

Karthi29: பீரியாடிக் ஜானர்.. வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் கைகோர்த்த கார்த்தி! - முழு விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 16, 2024 11:27 AM IST

Karthi29: வெற்றிமாறனின் உதவி இயக்குநர் தமிழுடன் கார்த்தி புதிய படமொன்றில் கமிட் ஆகி இருக்கிறார். இந்தப்படம் கார்த்தியின் 29 வது படமாக உருவாக இருக்கிறது. - முழு விபரம்!

Karthi29: பீரியாடிக் ஜானர்.. வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் கைகோர்த்த கார்த்தி! - முழு விபரம்!
Karthi29: பீரியாடிக் ஜானர்.. வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் கைகோர்த்த கார்த்தி! - முழு விபரம்!
கார்த்தியின் 29 வது படத்தின் போஸ்டர்
கார்த்தியின் 29 வது படத்தின் போஸ்டர்

தென்னிந்திய திரைத்துறையில், மாறுபட்ட களத்தில், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, குக்கூ, ஒக்கே ஒக்க ஜீவிதம், ஃபர்ஹானா போன்ற அழுத்தமான படைப்புகளை, பெரிய திரையில் எந்த சமரசமும் இல்லாமல் தயாரித்து வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்தியுடன் மீண்டும் கைகோர்க்க இருக்கிறது.

முன்னதாக, கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற வெற்றிப்படங்களையும், காஷ்மோரா மற்றும் ஜப்பான் போன்ற மாறுபட்ட சோதனை முயற்சிகளையும் வழங்கியுள்ளனர்.

டாணாக்காரன் படப்பிடிப்பில் தமிழ்
டாணாக்காரன் படப்பிடிப்பில் தமிழ்

தற்போது, கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணையும் அடுத்த படமான #Karthi29 படத்தினை, இயக்குநர் தமிழ் இயக்குகிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விமர்சன ரீதியாக, பெரும் பாராட்டுக்களைக் குவித்த, “டாணாக்காரன்” மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தமிழ். அவர் இயக்கிய இத்திரைப்படம் நேரடி டிஜிட்டல் வெளியீடாக வெளியான போதிலும், முன்னணி விமர்சகர்களிடமிருந்து, பெரும் பாராட்டுக்களைப் பெற்றதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் குவித்ததும் குறிப்பிடதக்கது.

பீரியாடிக் திரைப்படம்

#Karthi29 திரைப்படம் பீரியாடிக் திரைப்படமாக, பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.இந்த #Karthi29 பிரம்மாண்ட திரைப்படத்தினை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்ரமணியன் தலைமையிலான ‘ஐவிஓய்’ ( IVY ) என்டர்டெயின்மென்ட் மற்றும் ’பி ஃபோர் யு’ ( B4U ) மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

#Karthi29 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை, தயாரிப்பாளர்கள் தற்போது தொடங்கிவிட்டனர். #Karthi29 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

கார்த்தி நடிப்பில் வருகிற செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் மெய்யழகன். 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். இவருடன் இணைந்து கண்ணன் சுந்தரம் மற்றும் என்.அரவிந்தன் ஆகியோரும் இணை இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். 96 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைக்கிறார். 96 படத்தில் இல்லாததுபோல, இந்தப் படத்திலும் ஸ்டண்ட் மாஸ்டர் இல்லை.

இப்படத்தின் ஒளிப்பதிவினை மகேந்திரன் ஜெயராஜூ செய்கிறார். எடிட்டிங்கினை கோவிந்தராஜ் செய்கின்றார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் உமா தேவி ஆகியோர் எழுதுகின்றனர். கலை பணியினை செ.ஐயப்பனும் மக்கள் தொடர்பை ஜான்சனும் செய்கின்றனர். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.