Trisha Movies OTT: த்ரிஷா ரசிகர்களே..உங்கள் ஆசை நாயகியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்-6 trisha starrer action thriller movies you can watch on ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha Movies Ott: த்ரிஷா ரசிகர்களே..உங்கள் ஆசை நாயகியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்

Trisha Movies OTT: த்ரிஷா ரசிகர்களே..உங்கள் ஆசை நாயகியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 24, 2024 04:24 PM IST

Trisha Movies OTT: தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. உங்கள் ஆசை நாயகியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

Trisha Movies OTT: த்ரிஷா ரசிகர்களே..உங்கள் ஆசை நாயகியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்
Trisha Movies OTT: த்ரிஷா ரசிகர்களே..உங்கள் ஆசை நாயகியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்

சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் த்ரிஷா. தற்போது மட்ட பாடலின் விடியோ வெர்ஷனை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தி கோட் படத்தை தொடர்ந்து அஜித்தின் விடா முயற்சி, சிரஞ்சீவியுயன் விஸ்வம்பரா, மோகன்லாலுடன் ராம் ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். புதிய ஹீரோயின்களுக்கு சரியான போட்டியாக இருந்து வரும் த்ரிஷா சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இதையடுத்து த்ரிஷா நாயகியாக நடித்து சூப்பர் ஹிட்டான அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படங்கள் எந்தெந்த ஓடிடியில் உள்ளது என்பதை பார்க்கலாம்

திருப்பாச்சி

கில்லி பட வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் - த்ரிஷா ஜோடியாக நடித்த படம் திருப்பாச்சி. பேரரசு இயக்கியிருந்த இந்த படம் தங்கை செண்டிமென்ட் உடன் அதிரடியான சண்டை காட்சிகளுடன் விறுவிறுப்பான படமாக அமைந்திருக்கும். படத்தில் த்ரிஷாவின் டான்ஸ், கவர்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது.

என்னை அறிந்தால்

ஜீ, கிரீடம் படத்துக்கு பின்னர் த்ரிஷா, அஜித்துடன் இணைந்து நடித்த படம் என்னை அறிந்தால். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஹெமானிகா என்ற பெயரில் கிளாசிக்கல் டான்சராகவும், அஜித்தின் காதலியாகவும் த்ரிஷா தோன்றியிருப்பார். அதிரடி ஆக்‌ஷன் படமான என்னை அறிந்தால் ஆஹா தமிழ் ஓடிடியில் உள்ளது

லியோ

விஜய்யின் மனைவியாக, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக த்ரிஷா நடித்திருக்கும் லியோ கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிய படமாக உள்ளது, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

தூங்காவனம்

மன்மதன் அம்பு படத்துக்கு பின்னர் கமலுடன் இணைந்து த்ரிஷா நடித்திருக்கும் படம் தூங்காவனம். இந்த படத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு ஆபிசராக தோன்றும் த்ரிஷா ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருப்பார். ஒரே நாளில் நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தாவில், த்ரிஷா ஹீரோயினாக நடித்திருப்பார். அஜித்தின் காதலியாக தோன்றியிருப்பார். ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான மங்காத்தா சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் உள்ளது.

சாமி

விக்ரம் ஜோடியாக த்ரிஷா நடித்த சாமி படத்தை ஹரி இயக்கியிருப்பார். விக்ரம் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், அவரை காதலித்து மனைவியாகும் கதாபாத்திரத்திலும் த்ரிஷா நடித்திருப்பார். ஹோம்லி பெண்ணாகவும், பாடலில் கவர்ச்சியும் காட்டி ரசிகர்களை கவர வைத்திருப்பார். த்ரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சாமி திரைப்படம் அமேசான் ப்ரைம் விடியோவில் உள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.