தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்’ - மீண்டும் புலனாய்வுப் புலியான சுரேஷ் கோபி

'அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்’ - மீண்டும் புலனாய்வுப் புலியான சுரேஷ் கோபி

Marimuthu M HT Tamil
Nov 04, 2023 01:08 PM IST

புலனாய்வுப்போலீஸ் அதிகாரியாக நடிகர் சுரேஷ் கோபி நடித்து மலையாளத்தில் ரிலீஸான கருடன் படம் அங்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கருடன்
மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கருடன்

ட்ரெண்டிங் செய்திகள்

மலையாளத்தில் சுரேஷ் கோபி மற்றும் பிஜு மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் கருடன். அறிமுக இயக்குனர் அருண் வர்மா இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு மிதுன் மானுவல் தாமஸ் திரைக்கதை எழுதி உள்ளார். 'கருடன்' படம் விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. பல விறுவிறுப்பான திருப்பங்களுடனும், சிறப்பான காட்சிகளுடனும் பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் புலனாய்வு கதையாக எடுக்கப்பட்டுள்ளது. 

கதையின் கரு என்ன?கேரள மாநிலம், கொச்சி நகரில் நடக்கும் ஒரு குற்றச் சம்பவத்துடன் படம் தொடங்குகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் DCP ஹரிஷ் மாதவன் என்ற கதாபாத்திரத்தில் சுரேஷ் கோபி நடித்துள்ளார். அடுத்தடுத்த விசாரணையில் படம் விறுவிறுப்பாக செல்கிறது. 

இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியராக நிஷாந்த் என்ற கதாபாத்திரத்தில் பிஜு மேனன், சற்று வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் பல சட்டப் போராட்டங்களைப் பற்றியும் பேசுகிறது. ரசிகர்களை கனெக்ட் செய்யும் வகையில் எமோஷனல் காட்சிகளும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. ஒரு வித்தியாசமான கருப்பொருளை நல்ல திரைக்கதையின் உதவியுடன் எடுத்துள்ளார், அறிமுக இயக்குனர் அருண் வர்மா.

ஜேக்ஸ் பிஜாயின் இசை மற்றும் பின்னணி இசை படம் முழுவதும் த்ரில்லர் மனநிலையுடன் நம்மை கொண்டு செல்கிறது. அஜய் டேவிட் கச்சபில்லியின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. திரில்லர் படத்துக்குண்டான எடிட்டிங்கில் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார் ஸ்ரீஜித். கருடன் படம் தற்போது திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தவிர, கருடன் படத்தில் அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சித்திக், திலீஷ் போத்தன், ஜெகதீஷ், திவ்யா பிள்ளை, தலைவாசல் விஜய் மற்றும் நிஷாந்த் சாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்